CINEMA

தி கோட் படத்தில் நடனமாட த்ரிஷா வாங்கிய சம்பளம் இவ்வளவா? வாயடைத்து போன ரசிகர்கள்..!

வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘தி கோட்’ படம் உலகம் முழுவதும் நேற்று 5 ஆம் திகதி வெளியானது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று, ஓரளவிற்கு நல்ல விமர்சனங்களையும் பெற்று வருகின்றது. 

முழு நேர மக்கள் பணியில் ஈடுபடவுள்ள விஜய் விரைவில் சினிமாவுக்கு முழுக்கு போடவுள்ள நிலையில், ரசிகர்கள் மத்தியில் ‘தி கோட்’ படத்திற்கான எதிர்பார்ப்பு படப்பிப்பின் போதே உச்சத்தில் இருந்தது. 

அதன்படி, வெளியான முதல் நாள் ‘தி கோட்’ திரைப்படம் உலகம் முழுவதும் ரூ. 45 கோடியும், தமிழில் ரூ. 38 கோடியும், மலையாளத்தில் ரூ. 2 கோடி, தெலுங்கில் ரூ. 2 கோடி வசூல் வேட்டை செய்திருப்பதாக தகவல் வெளியாகி வருனகின்றது. 

இந்த திரைப்படத்தில் த்ரிஷா ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடியிருப்பது ரசிகர்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் திரையுலகில் டாப் நாயகியாக இருக்கும் த்ரிஷா விஜய்க்கு ஜோடியாக  அதிகளவான திரைப்படங்களில் நடித்துள்ளரார். 

கில்லி திரைப்படத்தில் ஆரம்பித்த இவர்களின் இணைப்பு திருப்பாச்சி, குருவி, ஆதி என பல படங்களை கடந்து, இறுதியில் லியோவிலும் தளபதிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.  

ஆனால் தி கோட் படத்தில் விஜய் சினேகா-மீனாட்சி செளத்ரி ஆகியோருடன் இணைந்து நடித்துள்ளார். த்ரிஷா கேமியோ கதாப்பாத்தில் நடித்திருப்பதை படக்குழு ரகசியமாகவே வைத்திருந்தது. முதல் நாள் ஷோவில் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தது.

இதவரையில்  நடிகை த்ரிஷா, ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடியதில்லை. ரஜினிகாந்துடன் நடிக்க, பேட்ட படத்தில் கேமியோ கதாப்பாத்திரத்தில் நடித்தாரே தவிர ஒரு பாடலுக்கு மட்டும்நடனமாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

ஆனால், விஜயின்  தி கோட் படத்தில் “மட்ட” பாடலுக்காக அவர் நடனமாடியிருப்பது ரசிகர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையி்ல் இவர் அதற்காக வாங்கிய சம்பளம் தொடர்பாக வெளியாகியிருக்கும் தகவல் ரசிகர்களை வாய்பிளக்க வைத்துள்ளது. 

சில நிமிட பாடலில், 1 நிமிடம் கூட வராத த்ரிஷா அதற்கு  ரூ.50 முதல் 80 லட்சம் வரை சம்பளமாக வாங்கியிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கின்றது. இது குறித்து இன்னும் உத்தியோக பூர்வ தகவல் கிடைக்கவில்லை.