மாமனாரை ம டக் கி போட்ட மீனா.. செந்தில் உனக்கு படுக்கை இனி வெளிலதான்.. இது எங்க போய் முடிய போகுதோ..!
பாண்டியன் ஸ்டோர் சீரியலில் வீட்டில் இருக்கும் பொழுது ராஜி பாண்டியன் வரும்வரை காத்திருக்கிறார் பாண்டியன் வந்தவுடன் எனக்கு டைம் ஆகிவிட்டது என சொல்லிவிட்டு கிளம்புகிறார். என்ன கோமதி நான் வந்த உடனே இப்படி பரபரப்பா கிளம்புறா ராஜி என கேட்க ஆமா நீங்க மூஞ்ச தூக்கி வச்சு இருக்கீங்க அவ எப்படி பேசுவா பிரச்சனை எதுவா இருந்தாலும் பேசி தீர்க்கணும் அதை விட்டுட்டு மூஞ்ச திருப்பிக்கிட்டு போனீங்கன்னா என்ன அர்த்தம் பாவம் அவங்க ரெண்டு பேரும் என மீனா மற்றும் ராஜியை பற்றி கூறுகிறார் கோமதி.
மற்றொரு பக்கம் மீனா பாண்டியன் ஸ்டோர் கடைக்கு வருகிறார் அப்பொழுது எதற்காக இங்கே வந்தாய் என சித்தப்பா கேக்க உங்களை பார்க்க தான் எனக் கூறுகிறார் வீட்டில் தான் பார்த்தாயே என பேசுகிறாய். ஆனால் தாத்தாவை பார்க்க முடியவில்லை அதனால் வந்தேன் என கூறுகிறார் அந்த சமயத்தில் பாண்டியன் வருகிறார். நீ என்னமா இங்க வந்து இருக்க என கேட்க உங்கள பாக்க தான் வந்தேன் என மீனா கூறுகிறார் உடனே மீனா இது உங்களுக்கு நியாயமா இருக்கா நான் கல்யாணம் பண்ணிட்டு வந்தப்ப எங்க அப்பா அம்மாவை இதுவரைக்கும் மிஸ் பண்ணவே இல்ல.
அதுக்கு காரணம் நீங்களும் அத்தையும் தான் நீங்க ரெண்டு பேரும் நல்லா பாத்துக்கிறீங்க என உச்சந்தலையில் ஐஸ் வைக்கிறார் அது மட்டும் இல்லாமல் இனிமேல் என்கிட்ட பேச முடியுமா முடியாதா என திட்டவட்டமாக பேசுகிறார். உடனே பாண்டியன் நான் இனிமேல் பேசுகிறேன் நீ பத்திரமாக போ என கூறி பாண்டியண் அனுபிவைகிறார் அதனால் மீனா சந்தோஷமாக போகிறார்.
அதேபோல் மற்றொரு பக்கம் ராஜி திருமணம் செய்து கொண்டது குறித்து பேசிக் கொண்டிருக்கிறார்கள் அப்பொழுது தேவையில்லாமல் திருமணம் செய்து கொண்டு இவர்களுக்கு கஷ்டத்தை கொடுத்து விட்டேன் என பேச கோமதி உன்னோட நல்லதுக்காக மட்டும்தான் கதிர உனக்கு திருமணம் செய்து வைத்தேன் என கூறுகிறார் கோமதி இதனால் மீனாவும் அதுதான் உண்மை என்பது போல் பேச உடனே தங்கமயில் வருகிறார் கோமதி, மீனா, ராஜி என அனைவரும் பேச்சை நிறுத்துகிறார்கள் இதனால் தங்கமயிலுக்கு சந்தேகம் வருகிறது.
இவங்க எல்லாரும் ஒன்னு சேர்ந்தால் நம்மள பத்தி தான் பேசுவாங்க தேவையில்லாம நாம இவங்கள ஒன்னும் சேர்த்து வைத்து விட்டோம் அம்மா சொல்வது தான் சரி இனிமேல் இந்த விஷயத்தில் நாம தலையிடக்கூடாது என பேசிக் கொள்கிறார்கள். செந்தில் பாண்டியன் ஸ்டோருக்கு வர செந்திளிடம் மீனாவை ஆபீசில் விட்டு விட்டு வா நீ எல்லாம் ஒரு புருஷனா அவள மாதிரி கிடைக்க நீ கொடுத்து வைத்திருக்கனும் என பாண்டியன் கூறுகிறார்.
மேலும் செந்தில் மீனாவை வண்டியில் அழைக்கிறார் ஆனால் மீனா வர மறுக்கிறார் இதனால் இருவருக்கும் வாக்குவாதம் முற்றுகிறது ஒரு வழியாக செந்திலிடம் நான் கிளம்புகிறேன் என சொல்லிவிட்டு நடந்து போக செந்திலும் அவரைக் கண்டுக்காமல் வண்டியில் செல்கிறார் பிறகு கடைக்கு வந்த செந்திலை பாண்டியன் திட்டுகிறார் அந்த பிள்ளையை தேவையில்லாம கஷ்டப்படுத்தாதே எனக் கூறுகிறார் பாண்டியன் டீ குடிக்க செல்லும் நேரத்தில் செந்திலுக்கு அனைத்து உண்மையும் தெரிய வருகிறது இத்துடன் எபிசோட் முடிகிறது.