VJ Priyanka புருஷன் வாழ்கையை நா சமாக் கி ட்டா..! என் ஆதரவு Manimegalai-க்கு..! அதிரடியாக சொன்ன பாடகி Suchitra ..!
மணிமேகலை மற்றும் ப்ரியங்கா இடையேயான சண்டை தற்போது இணையத்தில் தீ போல பரவி வருகிறது. தன்னை தொகுப்பாளினியாக நிகழ்ச்சி நடத்தவிடாமல் பிரியங்கா தடுப்பதாக மணிமேகலை குற்றம்சாட்டி இருந்தார். இது மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. ரசிகர்கள் தொடர்ந்து பிரியங்காவை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். இதுவரை பிரியங்கா தரப்பில் இருந்து இதற்கு விளக்கம் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது மணிமேகலைக்கு ஆதரவாக பாடகி சுசித்ரா களம் இறங்கி உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டு உள்ள வீடியோவில், இதனை தைரியமாக வெளியே சொன்ன மணிமேகலையை பாராட்டுவதாகவும், இதற்க்கு கண்டிப்பாக ஒரு தைரியம் வேண்டும் என கூறி உள்ளார். மேலும் ப்ரியங்காவின் கணவர் தனக்கு தம்பி போல எனவும், அவரையே பிரியங்கா நாசமாக்கி விட்டதாக ஆதங்கமாக கூறி உள்ளார்.

மேலும், பிரியங்கா இப்படி நிகழ்ச்சியில் எல்லாரையும் புல்லி செய்து வருவதை கண்டிப்பதாகவும், இதனை நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்து சொன்ன மணிமேகலையை தான் ஆதரிப்பதாகவும் அவர் தெரிவித்து உள்ளார்.
