CINEMA

விஜயாவுக்கு நல்லது செய்ய போய் திட்டு வாங்கிய மீனா.. மனோஜிடம் வசமாக சிக்க போகும் ரோகிணி.. கல்யாணி வண்டவாளம் தண்டவாளம் ஏறுமா..!

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் விஜயா மற்றும் விஜயா வின் தோழி பார்வதி இருவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள் மீனா கொலு வைப்பதாக பேச அவ கொலு  வைக்கிறது எனக்கு பிடிக்கவில்லை எனக் கூறுகிறார் குடும்பத்திற்கு நல்லது யார் வச்சா என்ன நீ ஏதாவது செய்யப் போறியா மீனா தானே எல்லாத்தையும் செய்யப் போற என பேசுகிறார்.

உடனே விஜயாவும் சரி இருந்துட்டு போகட்டும் என கூறுகிறார் அதே போல் விஜய்யா டான்ஸ் கிளாஸில் இரண்டு காதல் ஜோடிகள் ரொமான்ஸ் செய்து கொண்டே இருக்கிறார் அப்பொழுது மீனா வருகிறார் மீனா அந்த காதல் ஜோடியை திட்ட உடனே இரண்டு பேரும் மீனா திட்டியதாக அபாண்டமாக பொய் சொல்லி விஜயாவிடம் போட்டுக் கொடுக்கிறார் இதனால் விஜயா மீனாவை திட்டுகிறார்.

மற்றொரு பக்கம் ரவி தன்னுடைய ஹோட்டல் முதலாளியின் மகளுடன் கடைக்கு வந்துள்ளார் அப்பொழுது பர்ச்சேஸ் பண்ணி கொண்டிருக்கும் பொழுது ஸ்ருதியின் அம்மா அவர்களை பார்க்கிறார். அவர்களை பார்த்து கடுப்பாகும் ஸ்ருதியின் அம்மா இதெல்லாம் என்ன என கேட்க அதற்கு ரவி பர்சேஸ் பண்ண வந்தோம் என கேஷுவலாக பேசுகிறார்.

ஹோட்டல் முதலாளியின் மகள் ரவியை தொட்டு தொட்டு பேசுவதை பார்த்த சுதா அதிர்ச்சி அடைந்து தன்னுடைய மகளுக்கு போன் பண்ணுகிறார் அவரிடம் நடந்ததை கூறுகிறார் இதனால் சுதாவும் ஸ்ருதியும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

மற்றொரு பக்கம் முத்து கொலு பொம்மை வாங்கிக் கொண்டு வருகிறார் அவர் அனைத்து பொம்மைகளையும் பார்த்துவிட்டு இது பத்தாது இன்னும் வாங்க வேண்டும் என பேசிக் கொண்டிருக்கும் பொழுது நாம் மத்தவங்க கிட்டயும் ஷேர் கேட்கலாம் என முடிவு செய்கிறார்கள் அதனால் மனோஜ் மற்றும் ரோகிணியிடம் பணம் கேட்க அதற்கு மனோஜ் கொடுக்க முடியாது என கூறுகிறார்.

ஒரே குடும்பத்திலிருந்து கிட்ட அப்படி சொல்ல முடியாது நாமளும் தான் கொண்டாட வேண்டும் என கூறி ரோகிணி தருகிறேன் என கூறுகிறார். அதே போல் அடுத்ததாக ரவி வீட்டிற்கு வந்து பாட்டு பாடி கொண்டிருக்கும் பொழுது சுருதி என்ன புதுசா பாட்டெல்லாம் பாடுகிறார் என கேட்க எங்க ஓனர் முதலாளியின் பொண்ணு இந்த பாடலை கேட்டார் நன்றாக இருந்தது அதனால் நானும் கேட்கிறேன் என கூறுகிறார்.

உங்கள் அம்மா கடைக்கு வந்தார்கள் என ரவி சுருதியிடம் சொல்ல ஆமா எனக்கும் தெரியும் அம்மா சொன்னாங்க நீதான் எல்லாகிட்டயும் மறைக்கிற என பேசுகிறார்கள் உடனே முத்து மீனா இருவரும் வந்து கொலு வைக்க காசு வேண்டும் உங்கள் ஷேர் 5000 எனக் கூற காலையில் ஏடிஎம் இல் எடுத்து தருகிறேன் என ரவி கூறுகிறார்.

மற்றொரு காட்சிகள் மனோஜ் கடையில் உட்கார்ந்து கொண்டிருக்கும் பொழுது ஒருவர் வந்து உங்களுக்கு தினமும் லெட்டர் கொடுப்பாரே அவர் யார் என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் நான்கு மணிக்கு ஒரு இடத்துக்கு வா என கூறியுள்ளார் இதனால் ரோகிணி அதிர்ச்சி அடைகிறார் இத்துடன் எபிசோட் முடிகிறது.