CINEMA

விஜய் டிவிக்கு Bye! Bye ! அதிரடியாக என்ட்ரி கொடுக்க இருக்கும் மணிமேகலை.. எந்த டிவியில்..!

சன் டிவியில் தொகுப்பாளராக இருந்த மணிமேகலை திடிரென விஜய் டிவிக்கு வந்தார். விஜய் டிவியில் பல நிகழ்ச்சியில் கலக்கி கொண்டிருந்தவர் மணிமேகலை. விஜய் டிவியின் முக்கிய நிகழ்ச்சியான குத் விக் கோமாளியில் கோமாளியாக கலக்கி கொண்டிருந்தவர். 4வது சீசனில் கோமாளியாக இருந்த இவர் திடீரென 5வது சீசனில் தொகுப்பாளராக களம் இறங்கினர்.


5வது சீசனில் பைனல் நெருங்கி கொண்டிருந்த நேரத்தில் சீசனில் இருந்து வெளியேருவதாக அறிவித்தார். அது மட்டும் இல்லாமல் தன்னுடைய நிகழ்ச்சியில் குக்காக இருக்கும் பிரபல தொகுப்பாளர் என்னை வேலை செய்ய விடாமல் அடக்கி வைப்பதாகவும் பதிவிட்டிருந்தார். இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் சர்சையை ஏற்படுத்தியது.

மேலும் ரசிகர்கள் பலர் மணிமேகலைக்கு ஆதரவாகவும் விஜய் டிவி பிரபலங்கள் பலர் பிரியங்காக்கு ஆதரவாகவும் வீடீயோஸ் போட்டும் போட்டோஸ் போட்டும் வந்தனர். இந்த நிலையில் மணிமேகலை தானாக வெளிவரவில்லை எனவும் விஜய் டிவி தான் வெளியில் அனுப்பியது எனவும் தகவல்கள் கசிந்தன.
இதனால் அவர் இனி விஜய் டிவி ல் எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்க்க முடியாத நிலையில் அவர் முதலில் தொகுப்பாளராக இருந்த சன் டிவி க்கு செல்வார் என்று எதிர் பார்த்த நிலையில் அவர் ட்விஸ்ட் கொடுக்கும் விதமாக ஜீ தமிழ் பக்கம் சென்றுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.

என்னும் அதிகார பூர்வமான அறிவிப்பு வரவில்லை அவர் விரைவில் அதிகார பூர்வமாக அறிவிப்பார் என்று எதிர் பார்க்கப்படுகிறது. அவர் தொகுப்பாளராக மட்டும் இல்லாமல் யூடூப்பில் வீடீயோஸ் போட்டும் வருமானம் சம்பாதிப்பது குறிப்பிடத்தக்கது.