அம்பலமாகிய கவரிங் நகை உண்மை! மனோஜ், விஜயாவை வெளுத்து வாங்கிய அண்ணாமலை..!
சிறகடிக்க ஆசை சீரியலில் தப்பிக்க நினைத்து விஜயா மற்றும் மனோஜ் செய்த காரியம் அவர்களுக்கே ஆப்பு வைத்துள்ளது.
சிறகடிக்க ஆசை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் பல சுவாரசியங்கள் நடந்து வருகின்றது. இந்த சீரியலுக்கு அதிகமான ரசிகர்கள் உள்ளனர்.

எதிர்நீச்சலைத் தொடர்ந்து மக்கள் அதிகம் விரும்பும் இந்த சீரியலில் நடுத்தர குடும்பத்தின் பெண் புகுந்த வீட்டில் படும் கஷ்டத்தை விவரித்துள்ளது.

மேலும் பெற்ற தாயே மகனை ஒதுக்கி வைக்கும் நிலையும் காட்டப்படுகின்றது. இதற்கான காரணத்தை சீரியல் தரப்பினர் மிகவும் சீக்ரெட்டாக வைத்துள்ளனர்.
இந்நிலையில் வீட்டில் மனோஜ் 4 லட்சம் ஏமாந்த விடயம் அனைவருக்கும் தெரிந்த நிலையில், நகை விஷயத்தை வெளிக்கொண்டு வர முத்து திட்டம் போட்டுள்ளார்.

தற்போது தப்பிப்பதற்கு விஜயா செய்த காரியம், அவர்களையே சிக்க வைத்துள்ளது. ஆம் அண்ணாமலைக்கு அனைத்து உண்மையும் தெரியவந்த நிலையில், மனோஜை போட்டு சரமாரியாக தாக்கியுள்ளார்.