Bigg Boss Tamil Season 8CINEMA

அனுமதி இல்லாமல் வந்த ஜாக்லின்..! வெளுத்து வாங்கிய பாய்ஸ் டீம் Bigg Boss Promo இதோ..!

தமிழில் 7 சீசன்களை கடந்து பிக் பாஸ் நிகழ்ச்சி 8வது சீசனில் அடியெடுத்து வைத்து இருக்கிறது. இந்த சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். பெரும் எதிர்பார்ப்புகளுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியின் முதல் நாளே விஜய் சேதுபதி திறமையாக கையாண்டு அசத்தியுள்ளார். தற்போது நாளுக்கு நாள் போட்டி சூடுபிடிக்க தொடங்கி இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த 8வது சீசனில் போட்டியாளர்களாக தீபக், அர்னவ்,ரஞ்சித், ரவீந்தர் சந்திரசேகர், கானா ஜெப்ரி,விஜே விஷால், நான் முத்துக்குமரன்,சத்யா , அருண் பிரசாத், சௌந்தர்யா நஞ்சுந்தன்,சாச்சனா,அன்ஷிதா, சுனிதா , ஜாக்லின்,ஆர்ஜே ஆனந்தி, பவித்ரா ஜனனி, தர்ஷா குப்தா என 18 பேர் கலந்துகொண்டு உள்ளனர். முதல் ஆளாக சாச்சனா எலிமினேட் ஆகியுள்ளார்.

தற்போது புதிய ப்ரோமோ வெளியாகி உள்ளது. ப்ரோமோவில், அனுமதி கேட்காமல் பாய்ஸ் இடத்திற்குள் வரும் ஜாக்லினை ஆண்கள் அணியினர் கடுமையாக கண்டிக்கின்றனர். இதனால் இரண்டு அணிகளுக்கும் இடையே கடும் மோதல் ஏற்படுகிறது.