யப்பா செம்ம அடி..! ஏன் இப்படி அவசரப்படுறாங்க..! பிக் பாஸ் ப்ரோமோ..!
தமிழில் 7 சீசன்களை கடந்து பிக் பாஸ் நிகழ்ச்சி 8வது சீசனில் அடியெடுத்து வைத்து இருக்கிறது. இந்த சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். பெரும் எதிர்பார்ப்புகளுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியின் முதல் நாளே விஜய் சேதுபதி திறமையாக கையாண்டு அசத்தியுள்ளார். தற்போது நாளுக்கு நாள் போட்டி சூடுபிடிக்க தொடங்கி இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த 8வது சீசனில் போட்டியாளர்களாக தீபக், அர்னவ்,ரஞ்சித், ரவீந்தர் சந்திரசேகர், கானா ஜெப்ரி,விஜே விஷால், நான் முத்துக்குமரன்,சத்யா , அருண் பிரசாத், சௌந்தர்யா நஞ்சுந்தன்,சாச்சனா,அன்ஷிதா, சுனிதா , ஜாக்லின்,ஆர்ஜே ஆனந்தி, பவித்ரா ஜனனி, தர்ஷா குப்தா என 18 பேர் கலந்துகொண்டு உள்ளனர். முதல் ஆளாக சாச்சனா எலிமினேட் ஆகியுள்ளார்.
தற்போது புதிய ப்ரோமோ வெளியாகி உள்ளது. ப்ரோமோவில், பாய்ஸ் மற்றும் கேர்ள்ஸ் டீம் இடையே கேள்வி பதில் போட்டிகள் நடத்தப்பட்டு உள்ளது. இதில் போட்டியிட வந்த தீபக் மற்றும் அர்னவ் நேருக்கு நேர் மோதி கீழே விழுந்து உள்ளனர். இந்த ப்ரோமோ ரசிகர்களை அதிர்ச்சி ஆக்கி உள்ளது.