மீனாவிடம் மன்னிப்பு கேட்க சொன்ன முத்து, அசிங்கப்படுத்திய விஜயா.. பரபரப்பான சிறகடிக்க ஆசை எபிசோட்..!
சிறகடிக்க ஆசை
பரபரப்பின் உச்சமாக விஜய் தொலைக்காட்சியில் சிறகடிக்க ஆசை தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.
இன்றைய எபிசோடில், மனோஜை உண்மை கூற சொல்லி முத்து அடிக்க செல்ல அவரும் உண்மையை ஒப்புக்கொண்டார்.
அவருக்கு பின் விஜயா இருப்பதையும் குடும்பத்தினர் தெரிந்துகொள்ள அண்ணாமலை மனோஜை புரட்டி எடுக்கிறார்.
அதோடு அண்ணாமலை, விஜயாவிடம் இனி பேச மாட்டேன், தண்ணீர் கூட உன்னிடம் வாங்கி குடிக்க மாட்டேன் என கூறுகிறார். உடனே விஜயா அறைக்கு சென்றவர் தான் வெளியே வரவில்லை.
நாளைய எபிசோட்
இந்த நிலையில் நாளைய எபிசோடிற்கான புரொமோ வெளியாகியுள்ளது. அதில் முத்து, மனோஜிடம் மீனாவிடம் மன்னிப்பு கேள் என்கிறார், ஆனால் ரோஹினி மனோஜ் ஏன் மீனாவிடம் கேட்க வேண்டும் என கோபப்படுகிறார்.
முத்து தவறு செய்தவர்கள் எந்த வயதாக இருந்தாலும் மன்னிப்பு கேட்டு தான் ஆக வேண்டும் என கூறுகிறார்.
விஜயா பெரிய நகை கொண்டு வந்துவிட்டாய் என தனது கையில் இருக்கும் வளையலை கழற்றி மீனா மூஞ்சில் வீசி எறிகிறார். இதோ சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு புரொமோ,