காதலன் தோளில் சாய்ந்த பாவனி..! வைரலாகும் கியூட்டான புகைப்படங்கள் இதோ..
பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமாகியவர் அமீர். நடன இயக்குனராக பணியாற்றி வந்த அமீர் தற்போது இயக்குனர் மற்றும் நடிகர் அவதாரம் எடுத்து இருக்கிறார். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பாவனி ரெட்டியை காதலித்து வருகிறார். மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சொந்த தயாரிப்பில் புதிய படத்தையும் இயக்க உள்ளதாக அறிவிப்புகளையும் வெளியிட்டு இருந்தார். அதற்கான பூஜையும் அண்மையில் நடைபெற்றது.
பாவனி மற்றும் அமீர் நீண்ட காலமாக காதலித்து வரும் நிலையில் அவர்களது திருமணம் எப்போது என ரசிகர்கள் ஆவலுடன் காத்து இருந்து வருகின்றனர். மேலும் திருமணம் குறித்து எந்த அறிவிப்பையும் இதுவரை காதலி பாவனி வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருவரும் அடிக்கடி வெளியூர் சென்று புகைப்படங்களை எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகின்றனர்.
தற்போது இவர்கள் ஜோடியாக எடுத்த ரொமேன்டிக் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு உள்ளனர். இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று உள்ளது. ரசிகர்கள் இருவரின் புகைப்படங்களுக்கு லைக்குகளை அள்ளிக்கொடுத்து இருவரையும் வாழ்த்தி கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.