வயதான பெண்ணுக்கு கடை வைத்து கொடுத்த KPY பாலா..! பாலாவின் சேவையை பார்த்த ரசிகர்கள் பாராட்டு..!
விஜய் டிவியில் போட்டியாளராக தனது வாழ்க்கையை தொடங்கியவர் பாலா. கலக்கப்போவது யார் சாம்பியன்ஸ் நிகழ்ச்சியில் கலக்கி அந்த நிகழ்ச்சியில் டைட்டில் வின்னரும் ஆகினார். இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து விஜய் டிவியில் எல்லா நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு கலக்கி தனக்கான இடத்தை ரசிகர்கள் மனதில் பிடித்து இருக்கிறார் பாலா. விஜய் டிவியில் இவர் இல்லாத நிகழ்ச்சியே இல்லை என்பது போல இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக களம் இறங்கி மிகப்பெரிய வரவேற்பினை பெற்று இருக்கிறார். இந்த சீசன்கள் மூலம் தனக்கான ரசிகர்கள் கூட்டத்தையே உருவாக்கி மிகப்பெரிய உயரத்தை அடைந்து இருக்கிறார். மேலும் இவர் சம்பாதிக்கும் பணங்களில் அனைவர்க்கும் பல உதவிகள் செய்து வருகிறார். மேலும் ராகவா லாரன்ஸ் உடன் இணைந்தும் பல உதவிகள் செய்து வருகிறார்.
மேலும் பாலாவின் செயல்களை பார்த்து வியந்த லாரன்ஸ் அவரை நாயகனாக அறிமுகம் செய்ய உள்ளார். அதற்கான வேலைகள் நடைபெற்று வருகிறது. தற்போது இவர் வறுமையால் கஷ்டப்பட்ட வயதான பெண்ணுக்கு கடை வைத்து கொடுத்து உள்ளார். இதனை வீடியோவாக தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு உள்ளார்.இவரின் இந்த செயலை ரசிகர்கள் பெருமளவு பாராட்டி வருகின்றனர்.