சவால் விடும் ஈஸ்வரி.. கோபியை எதிர்த்து நிற்கும் பாக்கியா- வெற்றி யாருக்கு..!
சமையல் போட்டியில் பாக்கியாவிற்கு சார்பாக ஈஸ்வரி நிற்பதால் கோபி கடுப்பாகியுள்ளார்.
பாக்கியலட்சுமி
பிரபல தொலைக்காட்சியில் 1000 எபிசோடை கடந்து ஓடி கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி.
இந்த சீரியலில் நடிக்கும் கதாபாத்திரங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவிட்டதால் இன்று வரை சுவாரஸ்யமாக சென்றுக் கொண்டிருக்கின்றது.
அந்த வகையில், ஈஸ்வரி- ராதிகா பிரச்சினை ஒரு வழியாக முடிவுக்கு வந்ததால் பாக்கியா வீட்டில் எல்லோரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடுகிறார்கள்.
மீண்டும் மோதும் பாக்கியா – கோபி
இந்த நிலையில் கோபத்தில் ஈஸ்வரி, “இனி எனக்கு மகனே இல்லை. எனக்கு இருப்பது ஒரே மகள் பாக்யா தான். நான் இறந்த பிறகு கூட என்னுடைய சாவிற்கு நீ வரக்கூடாது..” என கூறியதுடன் தலையில் தண்ணீர் எடுத்து ஊற்றிக் கொள்கிறார்.
ஈஸ்வரி இப்படி செய்ததால் வீட்டிலுள்ள அனைவரும் அதிர்ச்சி ஆகிறார்கள். தன்னுடைய அம்மா இப்படி கூறியதும் கோபி எதுவும் பேச முடியாமல் மனம் நொந்து வெளியே போகிறார்.
இதனை தொடர்ந்து பாக்கியா மற்றும் இருவரும் சமையல் போட்டியொன்றில் கலந்து கொள்கிறார்கள். அம்மாவை தன்னை விலக்கிய போதும் திருந்தாமல் மீண்டும் பாக்கியாவிற்கு எதிராக கோபி நிற்கிறார்.
இந்த போட்டியில் ஈஸ்வரியின் ஆதரவு முழுவதும் பாக்கியாவிற்கு இருப்பதால் கோபிக்கு கடுப்பாகி, பாக்கியாவிடம், “ நான் தான் இந்த போட்டியில் வெற்றி பெறுவேன்.” என திமிராக பேசி செல்கிறார்.
இப்படியாக இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.