ஹையோ..!!கண்ணுப்படுறப்போகுது… குழந்தையுடன் தீபாவளி அன்று அசத்திய விஜய் டிவி புகழ் மற்றும் அவரின் மனைவி…!
விஜய் டீவியின் பிரபலமான ரியாலிட்டி ஷோவில் ஒன்றான குக் வித் கோமாளி மூலம் பிரபலம் ஆனவர் தான் புகழ். இப்போது இவரை தெரியாத நபரே இப்பொது இருக்க முடியாது. இவர் முதலில் சிரிச்சா போச்சு எனும் ஷோவில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் வந்தவர். அதை தொடர்ந்து தன் திறமையின் மூலம் படிப்படியாக உயர்ந்தவர்.
இவரின் வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது குக் வித் கோமாளி நிகழ்ச்சிதான். அதில் தன் நகைச்சுவை திறமையால் மக்கள் மனதை வென்றவர். தற்போது இவர் சின்னத்திரையில் வெற்றி கண்டதை தொடர்ந்து வெள்ளித்திரையிலும் நடித்து வருகிறார். இவரின் மகள் பிறந்த நாளே சமீபத்தில் தான் மிக பிரமாண்டமாக கொண்டாடினார்.
இவர் கதாநாயகனாக நடிக்கும் ஜூ கீப்பர் படம் விரைவில் திரையாங்கில் வர உள்ளது. இந்நிலையில் நேற்று தீபாவளியை முன்னிட்டு இவர் தனது மகள் மற்றும் மனைவியுடன் கோலாகலமாக தீபாவளியை கொண்டாடியுளார். அதில் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்தும் கூறி வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.