CINEMA

சத்யா செய்த தவறால் மீனாவுக்கு கிடைத்த மிகப்பெரிய தண்டனை..! அடப்பாவமே மீனா பாவம் ..!சிறகடிக்க ஆசை ப்ரோமோ இதோ..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலுக்கு என மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. தொடக்கத்தில் சீரியல் கதை தடுமாறி இருந்தாலும் தற்போது வெற்றி சீரியலாக மாற்றியுள்ளார் இயக்குனர். இந்த சீரியல் வெற்றிக்கு முக்கிய காரணமே இதில் நடித்து வரும் நடிகர்கள் தங்களது சிறந்த நடிப்பினை கொடுப்பதே. தற்போது இந்த சீரியல் மிகப்பெரிய ஹிட் சீரியலாக உருவெடுத்து இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டு உள்ளது.

தற்போது முத்தை குடிக்க வைத்து செல்போனை எடுக்க திட்டம் போடுகிறார் ரோகிணி. அதேபோல் ரோகிணி மற்றும் மனோஜ் இருவருடைய திருமண கொண்டாட்டத்தில் முத்து குடித்து போதையாகிறார். இதனால் லிப்டில் வைத்து முத்துவின் செல்போனை ரோகிணி அவருக்கே தெரியாமல் திருடுகிறார். முத்து செல்போனில் உள்ள வீடியோவை விஜயாவிடம் காண்பிக்கிறார்.இதனால் கடும் கோபமடைந்த விஜயா, சத்யாவை வீடு புகுந்து தாக்குகிறார்.

இந்த தொடரின் புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது. ப்ரோமோவில், தம்பியை அடிக்க வரும் விஜயாவை கையைப்பிடித்து தடுக்கிறார். உடனே விஜயா , சத்யா திருடிய ஆதாரங்களை காண்பிக்கவே அவர் உறைந்து நிற்கிறார். மேலும் மீனா இனி என் வீட்டிற்கு வாழ வரக்கூடாது என கூறி செல்கிறார். இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.