வர்ஷினியிடம் உருகும் அருண்.. ரசிகை போட்ட Comment-க்கு அர்ச்சனா கொடுத்த பதிலடி..!
வர்ஷினியிடம் உருகும் அருண்.. ரசிகை போட்ட Comment-க்கு அர்ச்சனா கொடுத்த பதிலடி
பிரபல தொலைக்காட்சியில் கடந்த அக்டோபர் 3ஆம் தேதியில் முதல் பிக்பாஸ் சீசன் 8 ஒளிபரப்பட்டு வருகின்றது.
வழக்கத்தை விட இந்த சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகின்றார். இதற்கு முன்னர் ஒளிபரப்பான கடந்த 7 சீசன்களை விடவும் இந்த சீசன் மிகவும் பரபரப்பாக உள்ளது.
இந்த கருத்து இணையத்தில் ட்ரெண்டிங்கில் இருந்து வருகின்றது. இதனால் இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களே, ஒரு கண்டெண்ட் ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர்.
மற்ற சீசன்களிலும் பார்க்க இந்த சீசன், போட்டியாளர்களால் சுவாரஸ்யமான கண்டெண்ட்டுகளை கொடுக்க முடியவில்லை. போட்டியாளர்கள் எவ்வளவு முயற்சி செய்தாலும் இது சுவாரஸ்யமாக அமையவில்லை என்பதனை விஜய் சேதுபதி அடிக்கடி எபிசோட்களில் கூறி வருகிறார்.
அர்ச்சனா கொடுத்த பதிலடி
இந்த நிலையில், ரசிகர் ஒருவர் எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவுக்கு சீசன் 7 டைட்டில் வின்னர் அர்ச்சனா கொடுத்துள்ள பதில் இணையவாசிகளின் கவனத்திற்கு சென்றுள்ளது.
அதாவது ரசிகர் ஒருவர், ” அருண் எவ்வளவு இனிமையானவராக உள்ளார். உண்மையாலுமே அர்ச்சனா கொடுத்து வைத்தவர்தான்” எனப் பதிவிட்டு, அர்ச்சனாவை டேக் செய்துள்ளார். இந்தப் பதிவுக்கு அர்ச்சனா, ” ❤️😌💕கேப்டன் 👑” என பதிவிட்டுள்ளார்.
கடந்த சில நாட்களாக அருண்- அர்ச்சனா காதல் விவாகரம் சமூக வலைத்தளங்களில் பேசும் பொருளாக இருந்து வரும் வேளையில், இப்படியொரு பதில் கொடுத்து விமர்சனங்கள் அனைத்திற்கும் சரியான பதிலடிக் கொடுத்துள்ளார்.
மாறாக இந்த வாரம் அருண் கேப்டனான பின்னர் அர்ச்சனாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய சம்பவம் இருவரின் காதலையும் உறுதி செய்துள்ளது என இணையவாசிகள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.