CINEMA

கீர்த்தி சுரேஷின் வருங்கால கணவர் யார் தெரியுமா? சொத்து மதிப்பு விவரங்கள்..!

நடிகை கீர்த்தி சுரேஷின் வருங்கால கணவரின் சொத்து மதிப்பு விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

நடிகை கீர்த்தி சுரேஷ்

தென்னிந்திய சினிமாவில் பிரபலமாக இருக்கும் வாரிசு நடிகர்களில் ஒருவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் நடித்த முதல் படமே ரசிகர்கள் மத்தியில் கீர்த்தி சுரேஷிற்கு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.

இதனை தொடர்ந்து விஜய், சூர்யா, விஷால் என கோலிவுட் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர ஆரம்பித்து விட்டார்.

தற்போது தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, தமிழ் பல மொழிப்படங்களில் நடித்து வருகிறார். தேசிய விருது வாங்கிய நடிகைகளில் ஒருவராக இருக்கும் கீர்த்தி சுரேஷ், தனக்குள் இருக்கும் மொத்த காதலையும் சினிமாவில் காட்டி நடித்து வருகிறார்.

கீர்த்தியின் வருங்கால கணவர் யார் தெரியுமா?

இந்த நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் எதிர்வரும் டிசம்பர் மாதம் திருமணம் நடைபெறவுள்ளதாகலும் இருவருக்கும் ஏற்பட்ட 15 வருட காதலே திருமணத்திற்கான காரணம் என்றும் சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையில், நடிகை கீர்த்தி சுரேஷின் வருங்கால கணவரின் சொத்து மதிப்பு விவரங்கள் வெளியாகியுள்ளது.

அதாவது, கீர்த்தி சுரேஷினின் வருங்கால கணவர் பெயர் அந்தோணி. இவர் கேரள மாநிலத்தை சேர்ந்தவர், அந்தோணி தட்டில் தற்போது கொச்சி மற்றும் துபாயில் தொழிலதிபராக இருந்து வருகிறார்.

ஹபீப் ஃபீரூக்குடன் சேர்ந்து சென்னையில் பதிவு செய்யப்பட்ட ஆஸ்போர்ட் ஹவுஸ் விண்டோ சொல்யூஷன்ஸின் முதன்மை உரிமையாளராகவும் இருக்கிறார். இவருக்கு கேரளா மற்றும் துபாயில் கோடிக்கணக்கில் சொத்துக்களுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.