ஆபத்து என்னனு தெரிஞ்சுக்கிட்டு தீர்வையும் தெரிஞ்சுக்கோங்க
செம்பனை எனப்படும் ஒருவகை பனைமரத்தில் காய்க்கும் பழங்களில் இருந்து பாமாயில் எனப்படும் எண்ணெய் தயாரிக்கப்படுகிறது.இந்த மரம் தென்னை மற்றும் பனைமரத்தை போன்றதொரு மரம். இதை எண்ணெய்ப் பனை என்கின்றனர். மேலும் இம்மரம் பாமாயில் பனை, செம்பனை எனவும் அழைக்கப்படுகிறது.
இதில் இருந்து சமையலுக்காக பெறப்படும் எண்ணெய்தான் பாமொயில் இன்று அதிகமான மக்கள் வீட்டில் சமையலுக்கு பாமாயிலை கூடுதலாக பயன்படுத்துகின்றனர்.அந்த வகையில் சமையலுக்கு பாமாயில் பயன்படுத்தினால் என்னனென்ன நன்மைகள் மற்றும் தீமைகள் கிடைக்கும் என்பதை தொடர்ந்து இந்த பதிவில் பார்க்கலாம்.
பாமாயில்
ஆன்டி ஆக்ஸிடென்கள் இந்த பாமாயிலில் நிறைவாக உள்ளதால் உடலில் உருவாகும் தேவையில்லாத செல்களை அழித்துவிடும்.அது மட்டுமல்லாமல் உடலில் உருவாகும் புற்றுநோய் கலங்களுக்கு இது பெரும்பாலும் எதிர்ப்பாக செய்படும். இதில் காணப்படும் ‘வைட்டமின் இ’ சருமத்தை ஒரு கவசம் போல பாதுகாக்கிறது.
இதனால் தோல் சம்பத்தப்பட்ட நோய்கள் வராது. தோலில் ஏற்படும் சுருக்கங்கள் நம்மை ஒரு போதும் அணுகாது. இந்த பாமொயிலில் அதிக வைட்டமின் A,E, பீட்டா கரோட்டின் நிறைந்து காணப்படுகிறது.இந்த சத்துக்கள் கண் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு ஒரு முற்றுபள்ளி வைக்கும். ‘ரெட்டினா’ குறைபாடு இருப்பவர்கள் இந்த பாமாயில் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு மிகவும் நல்லது.
தீமைகள்
என்னதான் பாமாயில் இவ்வளவு நன்மைகள் தந்தாலும் அதில் குறிப்பிட்ட சில தீமைகளும் உள்ளன. உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் இந்த பாமாயிலை எடுத்துக்கொள்ள கூடாது.அதில் கொழுப்பு சத்து நிறைந்து உள்ளது மற்றும் இதய நோய் உள்ளவர்கள், ரத்த அழுத்தம் பிரச்சனை உள்ளவர்கள், தலைசுற்றல், மயக்கம் போன்ற பிரச்சனைகள் இருப்பவர்கள் பாமாயிலை பயன்படுத்தக்கூடாதுஅளவுக்கு அதிகமாக பாமாயிலை பயன்படுத்துவதால் உடலில் பித்தம் சேர்ந்து பல பிரச்சனைகளுக்கு வழி வகுக்கும்.