CINEMA

சர்ச்சைக்கு பின் முதல் சந்திப்பு- திருமணத்தில் கெத்து காட்டிய நயன்தாரா- தனுஷ் Reaction..!

ஆவண பட சர்ச்சைக்கு பின் நயன்தாரா- தனுஷ் சந்திப்பின் போது எடுத்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

நடிகை நயன்தாரா திருமணம்

நடிகை நயன்தாராவின் திருமணத்தின் போது எடுக்கப்பட்ட ‘Nayanthara: Beyond the Fairy Tale’ என்ற ஆவணப்படத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது.

இந்த படத்தில் வரும் சில காட்சிகளையும், பாடல்கள் மற்றும் இசை உள்ளிட்டவைகளை ‘நானும் ரெளடி தான்’ படத்திலிருந்து பயன்படுத்த வேண்டும் என்பதற்காக நடிகர் தனுஷிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.

தனுஷ் அதற்கு அனுமதி தராமல் இரண்டு வருடங்கள் தாமதமாக்கியுள்ளார். இந்த நிலையில், தற்போது அந்த 3 செக்கன் வீடியோவிற்கு தனுஷ் தரப்பிலிருந்து 10 கோடி ரூபாய் இழப்பீடு தரக்கோரியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கு பதிலளிக்கும் விதமாகவும் தனுஷின் உண்மையான முகத்தை வெளிகாட்டும் விதமாகவும் சமூக வலைத்தளங்களில் நயன்தாரா கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதற்கு பதிலடிக் கொடுக்கும் விதமாக தனுஷ் தரப்பிலிருந்து வக்கில் நோட்டிஸ் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.

திருமண விழாவில் நடந்த சந்திப்பு

இப்படி ஏகப்பட்ட சிக்கல்கள் சென்றுக் கொண்டிருக்கும் பொழுது நயன்தாரா- தனுஷ் இருவரும் சந்தித்து கொண்டுள்ளனர்.

தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரின் திருமண நிகழ்ச்சியில் பல பிரபலங்களுக்கு மத்தியில் நயன்தாரா – தனுஷ் இருவரும் சந்தித்துக் கொண்டுள்ளனர்.

இதன்போது எடுத்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

புகைப்படங்களை பார்த்த நயன்தாரா, தனுஷ் உட்கார்ந்துள்ள தோரணையைப் பார்த்த ரசிகர்கள், “ நிஜமான படையப்பா சீன் பார்ப்பது போல உள்ளது..” என ட்ரோல் செய்து வருகிறார்கள்.