மோசடி வழக்கில் சிக்கிய ராதிகா மிரட்டிய இனியா- கொந்தளிக்கும் கோபி..!
மோசடி வழக்கில் சிக்கிய ராதிகா, கோபிக்கு என்ன பதிலடி கொடுக்கப்போகிறார்.
பாக்கியலட்சுமி
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், கோபி போட்ட திட்டம்படி அனைத்து வேலைகளும் நடந்து வந்தது.
கோபியின் திட்டப்படி அவருடைய மூன்று பிள்ளைகளில் செழியன் மற்றும் இனியாவை அவர் பக்கம் சாய்த்து விட்டார். மிச்சமாக இருந்தது எழில் மட்டும் தான்.
அதற்கு ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்து கொண்டிருந்த கோபி, எழிலின் பட விழாவிற்கு வர வேண்டாம் என கூறுமாறு தயாரிப்பாளரிடம் கூறி விடுகிறார். இவர் நினைத்தது போன்று எழில் தடுத்தாலும், படத்தின் பெயராக அம்மா பெயரை வைத்து கோபிக்கே டுவிஸ்ட் கொடுத்து விட்டார்.
“இது என்னுடைய அம்மாவின் பெயர் அவர் பட்ட கஷ்டங்களையும் துன்பங்களையும் சொல்லும் விதமாக இந்த படத்தை எடுக்கப் போகிறேன்..” என்கிறார் எழில்.
இதற்கிடையில் பாக்கியாவின் கேன்டீன் சீல் கோபி தான் காரணம் என்ற உண்மை அனைவருக்கும் தெரியவந்துள்ளது. இதனால் கடுப்பான பாக்கியா பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுத்து கோபியை கைது செய்யும் படி செய்துள்ளார்.
மொத்தமாக சிக்கிய ராதிகா
இந்நிலையில், கோபி கைது செய்யப்பட்டதை தொடர்ந்து இது தொடர்பான விவரங்களை தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகியுள்ளது.
இந்த சம்பவம் ராதிகாவிற்கு மிகுந்த மன வறுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
அத்துடன் விடாமல் இனியா ராதிகா வீட்டிற்கு சென்று, “ நீங்கள் எங்க அப்பா வாழ்க்கையில் வராமல் இருந்திருந்தால் நாங்கள் சந்தோஷமாக இருந்திருப்போம். எங்கள் குடும்பம் இப்படியான நிலைக்கு வந்ததற்கான முக்கிய காரணம் நீங்கள் தான்..” என பேசி செல்கிறார்.
ஏற்கனவே கோபி விடயத்தில் சந்தோஷம் இல்லாமல் இருக்கும் ராதிகா மோசடி வழக்கிற்கு என்ன பதிலடிக் கொடுப்பார் என்பதனை தொடர்ந்து வரும் எபிசோட்களில் பார்க்கலாம்.