CINEMA

பணத்தை எடுத்தது மீனாதான் முத்து சொன்ன ஒத்த வார்த்தை.. பங்கம் பதினாறும் போய் அசிங்கப்பட்டு நிற்கும் விஜயா..!

சிறகடிக்க ஆசை சீரியலில் மீனா தான் பணத்தை எடுத்துள்ளார் என விஜயா கூறிய உடன் முத்து கோபப்படுகிறார் அதுமட்டுமில்லாமல் என்னுடைய பொண்டாட்டி எடுத்திருக்க மாட்டாள் என திட்டவட்டமாக கூறுகிறார்.. உடனே மீனாவிடம் முத்து பேசிவிட்டு நான் போய் பார்வதியை பார்க்கிறேன் அப்பொழுது தான் உண்மை தெரியும் என கிளம்புகிறார்.

பார்வதியை பார்க்க போன முத்து பார்வதி இடம் அம்மா தான் மீனவ சந்தேகப்படுறாங்க மீனாவுக்கு உங்களை எவ்வளவு பிடிக்கும் ஆனால் நீங்க கூட இப்படி சந்தேகப்படலாமா அவ உங்கள நினைச்சு அழுதுகிட்டே இருக்கா. என்னையும் மீனாவையும் அம்மாவுக்கு பிடிக்காது. ஆனா எங்க ரெண்டு பேருக்குமே உங்கள ரொம்ப பிடிக்கும் உங்களுக்கு எங்கள புடிக்கும் ஆனா நீங்க இப்படி போய் சந்தேகப்படலாமா என முத்து பாசமாக பேசுகிறார்.

இதனால் பார்வதி கண்கலங்கி நா மீனவ சந்தேகப்படல என கூறுகிறார் உடனே பணத்தை தான் மீனை எடுத்துட்டான்னு சொல்றீங்களா உடனே போலீஸ் கேஸ் கொடுங்கள் என கூறுகிறார் போலீஸ் கேஸ் வேண்டாம் என கூறி மொத்த உண்மையையும் கூறுகிறார் அந்த பணம் என்னுடையது கிடையாது விஜயா உடையது நீ கொடுத்த இரண்டு லட்சம் தான் வக்கீல் வந்து கொடுத்தார் என கூறி விடுகிறார்.

உடனே முத்து வீட்டிற்கு செல்கிறார் வீட்டிற்கு சென்று மீனாதான் பணத்தை எடுத்தால் எனக் கூற மீனா பதறி போய் அழுகிறார். ஆனால் அண்ணாமலை மீனா என்ன சொன்னாலும் அவன் எடுத்திருக்க மாட்டார் என கூறுகிறார் அதே போல் சுருதி ரவி என அனைவரும் மீனா பணத்தை எடுத்து இருக்க மாட்டாள் என நம்புகிறார்கள் ஆனால் முத்து அழுத்தம் திருத்தமாக அவ தான் எடுத்து இருப்பா என கூறுகிறார் உடனே விஜயா சந்தோஷப்பட்டு பேசிக் கொண்டிருக்கிறார்.

உடனே முத்து அப்பா அம்மா கிட்ட சொல்லுங்க 2 லட்சம் பணம் நானே கொடுத்துடறேன் ஆனா கேஸ் கொடுக்க வேண்டாம் என்று சொல்லுங்கள் என பேச அதற்கு பணத்தையும் வாங்கிட்டு கேஸ் கொடுக்காம இருக்கிறதா அந்த மாதிரி கேவலமான பொத்தி எனக்கு கிடையாது என அண்ணாமலை கூற உடனே முத்து கைதட்டி நீங்க செய்ய மாட்டீங்கன்னு எனக்கு தெரியும்பா ஆனா இந்த வீட்ல இன்னொருத்தங்க செஞ்சிருக்காங்க என பேச என்ன சொல்ற என கேட்கிறார்.

ஆமா மீனாவுடைய தம்பிய காப்பாத்த நான் அஞ்சு லட்சம் வக்கீல் கிட்ட கொடுத்தேன் அதுல ரெண்டு லட்சத்தை அம்மா தான் வாங்கிட்டு கேச வாபஸ் வாங்குனாங்க என பேச அண்ணாமலை கோபப்பட்டு இது உண்மையா முத்து சொல்றது உண்மையா என கேட்கிறார் ஆமா நான் கேச வாபஸ் வாங்கலைன்னா இந்நேரம் ஜெயில்ல இருப்பான் மீனாவோட தம்பி என்ன பேசுகிறார் உடனே இப்படி ஒரு கேவலமான வேலையை நீ செய்வ என்று நான் எதிர்பார்க்கவே இல்லை எனக் கூறுகிறார்.

உடனே மொத்த குடும்பமும் உண்மையை தெரிந்து கொண்டு இப்படியா செய்விங்க என்பது போல் விஜய் அவை ஏளனமாக பார்க்கிறார்கள் இத்துடன் எபிசோட் முடிகிறது.