வேலைக்கு செல்லும் அண்ணாமலை… மகனுடன் மாட்டிக் கொள்ளும் ரோகினி..!
சிறகடிக்க ஆசை சீரியலில் அண்ணாமலை வேலைக்கு செல்ல தயாராகியுள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகளையும் செய்து வருகின்றார்.
சிறகடிக்க ஆசை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. முத்து மீனா இருவரின் நடிப்பிற்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் உள்ளனர்.
ரோகினியின் சதி வேலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. தற்போது அவர் செய்த சதி வேலை அவருக்கே வினையாக மாறியுள்ளது.
ஒருவழியாக பிரச்சனையில் மாட்டாமல் தனது தாலி செயினை வைத்து பணத்தை ஏற்பாடு செய்து முத்துவிற்கும், ஏற்கனவே திருடிய பணத்தையும் கொடுத்துள்ளார்.
தற்போது அண்ணாமலை வேலைக்கு செல்வதற்கு ஏற்பாடு செய்கின்றார். ஒரு இடத்திற்கும் வேலைக்கு சேர்ந்துவிட்ட நிலையில், அங்கு ரோகினி தனது மகன் க்ரிஷ் மற்றும் அவரது அம்மாவுடன் ஆட்டோவில் வந்து இறங்கியுள்ளார்.
அவ்விடத்தில் அண்ணாமலையும் நிற்கும் நிலையில், அவரிடம் ரோகினி சிக்குவாரா? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.