CINEMA

கோபியின் சுயரூபத்தை அறிந்த இனியா… அடுத்து நடக்கப்போவது என்ன..!

பாக்கியலட்சுமி சீரியலில் கோபி செய்த சதி வேலைகள் அனைத்தும் இனியாவிற்கு தெரிந்துள்ள நிலையில் கதறி அழுதுள்ளார்.

பாக்கியலட்சுமி

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளது. நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த பெண் கணவர் துணையில்லாமல் வாழ்ந்து காட்டும் கதையை கொண்டு செல்கின்றது.

தற்போது தனது வேலையில் கவனம் செலுத்தி வரும் பாக்கியாவிற்கு கோபி தொந்தரவு கொடுத்து வருகின்றார். கோபி செய்த சதியைக் கண்டுபிடித்த பாக்கியா பொலிசில் புகார் அளித்துள்ளார்.

காவல்நிலையம் வரை சென்று வந்த கோபி மீண்டும் கோபத்தின் உச்சத்தில் இருக்கின்றார். மீண்டும் பாக்கியாவை பழிதீர்க்க யோசனை செய்தும் வருகின்றார்.

இந்நிலையில் கோபி செய்த சதி வேலைகள் அனைத்தும் இனியாவிற்கு தெரியவந்துள்ளது. இனியா தந்தையைக் குறித்து தெரிந்ததும் கதறி அழுதுள்ளார்.

மகளிடம் மன்னிப்பு கேட்டு நடித்துள்ள கோபி அவரை சமாதானப்படுத்தி கடற்கரைக்கு அழைத்துச் செல்வதாக கூறியுள்ளார். இனியா தற்போது நடந்து கொள்ளும் விதம் ரசிகர்களைக் கோபத்தில் ஆழ்த்தி வருகின்றது.