கட்டுங்கடங்காமல் அசுர வேக முடி வளர்ச்சிக்கு இது போதும்
சில பெண்களுக்கு முகத்தில் முடியின் வளர்ச்சி காணப்படும். தாடை பகுதி, தாடிக்கு கீழ், வாய்க்கு மேல் என மெலிசாக அல்லது சிலருக்கு அடர்த்தியாகவும் முடியின் வளர்ச்சி தோன்றும்.
இது ஏன் ஏற்படுகிறது என அறியாமலேயே சில பெண்கள் ஷேவிங், வேக்ஸிங் செய்ய ஆரம்பித்து விடுகின்றனர்.ஷேவிங் வேக்ஸிங் செய்வதால் முடி வளர்ச்சி தூண்டிவிடப்பட்டு அடர்த்தியாக வளரவும் வாய்ப்புகள் உண்டு என்பதை பெண்கள் மறந்துவிட கூடாது.
சில மருத்துவ நிலைகள், மற்றும் உட்கொள்ளும் சில மருந்துகளின் காரணங்களால் கூட முடி வளர்ச்சி தூண்டிவிடப்படலாம்.எனவே, முதலில் ஏன் முகத்தில் முடி வளர்ச்சி தோன்றுகிறது
என பெண்கள் கண்டறிய வேண்டும். பிறகு, அதற்கான தனிப்பட்ட சிகிச்சைகள் மூலம் வளர்ச்சியை தடுக்கும், குறைக்கும் முயற்சிகளில் ஈடுபட வேண்டும்.