CINEMA

இசையால் இணைந்த ஜி.வி.பிரகாஷ் மற்றும் சைந்தவி.. நெகிழ்ச்சியில் ரசிகர்கள்..!

தமிழ் சினிமாவில் முன்னணி பாடகியாக தன்னுடைய பெயரை தக்க வைத்து கொண்டவர் பாடகி சைந்தவி. இவருடைய குரலுக்கு பல ரசிகர்கள் அடிமை என்றே கூறலாம். அந்த வகையில் இவர் பல சூப்பர் ஹிட் பாடல்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளார். இவரும்   இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ்ம் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு பெண்குழந்தையும் உள்ளது. மேலும் இருவரும்  இணைந்து பல பாடல்கள் பாடி உள்ளனர். மேலும் இருவரும் சூப்பர் ஜோடியாக வலம் வந்து இருந்தனர்.

இவர்கள் இருவரும் இணைந்து பல சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்துள்ளனர். மேலும்  ஜி வி பிரகாஷ் பாடலுக்கும் ரசிகர்கள் அதிகம். இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று  தற்போது பிரிந்து வாழ்ந்து வருகின்றன்ர். இந்நிலையில் மலேசியாவில் நடக்கும் கசேரியில் சைந்தவி பாட இருப்பதாக ஜி வி பிரகாஷ் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் அந்த கச்சேரியில்இவர்கள் இருவரும் இணைந்து ஒரே மேடையில்  “பிறை தேடும் இரவிலே” என்ற பாடலை பாடியுள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. விவாகரத்து பெற்ற பிறகும் இருவரும் அவர்களின் பணியில் சேர்ந்து இருப்பதை  பற்றி ரசிகர்கள் ஆச்சரியமாக பேசி வருகிறார்கள். பலரும் நீங்கள் சேர்ந்து வாழுங்கள் என்றும் கமெண்ட் அளித்து வருகிறார்கள்.