வாரிசு நடிகரின் பழைய பொண்டாட்டிக்கு பண்ணை வீடு.. மகனுக்காக பெரிய இடம் செய்த வேலை..!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த அந்த பேபி நடிகைக்கு கடந்த சில ஆண்டுகளாகவே நேரம் சரியில்லை போலிருக்கிறது.
இதனால் பல்வேறு சர்ச்சையில் அடுத்தடுத்து சிக்கிக் கொண்டிருக்கிறார் நடிகை. தற்போது புதிய சிக்கலில் சிக்கி இருக்கிறார். அதாவது பிரபல பெரிய இடத்து தயாரிப்பாளர் ஒருவர் அந்த நடிகைக்கு பண்ணை வீட்டை பரிசாக கொடுத்த தகவல் ஒன்று இணையத்தில் ஆதாரப்பூர்வமாக வைரலாகி கொண்டு இருக்கிறது.
சென்னையை பூர்வீகமாக கொண்ட அந்த பேபி நடிகை ஆரம்ப காலத்தில் சுமாரான படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். இதை தொடர்ந்து பெயர் சொல்லும் வகையில் ஒரு சில திரைப்படங்கள் பேபி நடிகைக்கு அமைந்தது.
அந்த படத்தை தொடர்ந்து தமிழ் தெலுங்கு மலையாளம் என அடுத்தடுத்து பல்வேறு மொழி படங்களில் நடித்து தன்னுடைய இமேஜை டெவலப் செய்து கொண்டார் பேபி நடிகை.
அதன் பிறகு வாரிசு நடிகர் ஒருவரின் படத்தில் அவருடன் நடித்த போது இருவருக்கும் இடையே நட்பு மலர அந்த நட்பு ஒரு கட்டத்தில் காதலாகி அந்த காதல் ஒரு கட்டத்தில் இருவரும் அடிக்கடி தங்களுடைய காதலை கொண்டாடும் அளவுக்கு கொண்டு போய்விட்டது.
இருவரும் தனிமையில் ஒரே வீட்டில், ஒரே ஹோட்டலில் செய்யும் கூத்துக்கள் எல்லாம் வீடியோ, புகைப்படங்களாக இணையத்தில் வெளியாகின. இவர்களுடைய இந்த விவகாரம் பெற்றோருக்கு தெரிய வர அவர்களுக்கும் காதலுக்கு பச்சை கொடி காட்டிவிட்டதால் இவர்களின் திருமமணம் தட புடலாக நடந்தது.
திருமணத்திற்கு பிறகும் சினிமாவில் நடிக்கலாம் என வாரிசு நடிகர் சொல்ல பேபி நடிகையும் பழைய உத்வேகத்துடன் நடித்து அசத்தினார். திருமணத்திற்கு பின்பு தான் பேபி நடிகைக்கு சினிமா வாழ்க்கை சூடு பிடித்தது என்று கூறலாம்.
அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகை என்ற பெயரை எடுத்த இவருக்கு வருமானம் கொட்டியது.
வங்கி இருப்பு கிடு கிடுவென உயர்ந்தது. ஆனால், மறுபக்கம் வாரிசு நடிகருக்கு சொல்லிக் கொள்ளும் அளவிற்கு படங்கள் வரவில்லை. ஒரு கட்டத்தில் தன்னைவிட தன்னுடைய மனைவியின் வங்கி இருப்பு அதிகமாக இருப்பது இருவருக்கும் இடையே ஈகோ பிரச்சனையை கிளப்பி விட்டுள்ளது.
இதுவே குடும்ப பிரச்சனையை பெரிதாக்கி விவாகரத்து வரை கொண்டு வந்து விட்டது. இதை தொடர்ந்து பேபி நடிகைக்கு பல கண்டிஷன்களை போட்டு படங்களில் நடிக்க கூடாது.. அதை செய்யக்கூடாது.. இதை செய்யக்கூடாது.. என மறைமுகமாக தொல்லை கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
இதனால் மணமுடைந்து போன பேபி நடிகை. தன்னுடைய கணவரை பிரிய முடிவு எடுத்திருக்கிறார். பிரியும்போது கோடிக்கணக்கான ரூபாய்களை இழப்பீடாக கொடுக்க முன் வந்திருக்கின்றனர். ஆனால், உங்கள் பொங்கலும் வேணாம் பூசாரித்தனமும் வேணாம் என்று தன்னுடைய புகுந்த வீட்டிலிருந்து ஒரு குண்டூசியை கூட எடுக்காமல் அணிந்திருந்த உடையுடன் கேப் புக் தன்னுடைய வீட்டிற்கு வந்திருக்கிறார் அந்த பேபி நடிகை.
இது ஒரு பக்கம் இருக்க விவாகரத்து முடிவுக்கு பிறகு அம்மணிக்கு போகாத காலம் ஏற்பட்டு பிரச்சனைக்கு மேல் பிரச்சனை. அடுத்து அடுத்ததாக கையில் இருந்த பட வாய்ப்புகள் எல்லாம் நழுவி போயின.
மட்டுமில்லாமல் உடல் நலமும் கெட்டுப் போனது. அரியவகையான ஒரு நோயினால் பாதிக்கப்பட்டிருந்த நடிகைக்கு பட வாய்ப்புகள் எல்லாம் கை நழுங்கிப்போனது. இதனால் கவலையிலிருந்தார் அந்த பேபி நடிகை.
அந்த நேரத்தை சரியாக பயன்படுத்திக் கொண்ட தயாரிப்பாளர் ஒருவர் 25 லட்சம் ரூபாய் கொடுத்து உதவி செய்திருக்கிறார். மட்டுமில்லாமல் தன்னுடைய மகன் கதாநாயகனாக இருக்கும் படத்தில் ஹீரோயினாக நடிக்குமாறு கேட்டிருக்கிறார்.
உங்களைப் போன்ற முன்னணி நடிகையின் படத்தில் என்னுடைய மகன் ஹீரோவாக நடித்த சினிமாவில் நல்ல எதிர்காலம் கிடைக்கும். நல்ல ஓபனிங் கிடைக்கும் என கூறி இருக்கிறார்.
தக்க நேரத்தில் அவர் உதவி செய்ததை மனதில் வைத்துக்கொண்டு அவருடைய மகனுக்கு ஹீரோயினாக நடித்துக் கொடுத்திருக்கிறார் பேபி நடிகை. மட்டுமில்லாமல் பேபி நடிகை கேட்ட பணத்தையும் கொடுத்து அந்த நடிகைக்கு பரிசாக ஒரு பண்ணை வீட்டையும் விலை உயர்ந்த கார் ஒன்றையும் வாங்கி கொடுத்திருக்கிறார் அந்த தயாரிப்பாளர்.
இந்த விஷயத்தை தயாரிப்பாளர் ஊடகம் ஒன்றில் வெளிப்படையாக போட்டு உடைக்க தற்போது பேபி நடிகைக்கு இது பெரிய தலைவலியாக மாறி இருக்கிறது.