HEALTH

கொசு தொல்லைக்கு இதை மட்டும் செய்ங்க இயற்கை வழி

பூச்சிகளிலேயே கொசுக்கள் மிகவும் எரிச்சலூட்டக்கூடியது. அதே சமயம் மிகவும் ஆபத்தானது. ஏனெனில் கொசுக்கள் பல ஆபத்தான நோய்களை மக்களிடையே பரப்பக்கூடியது. பொதுவாக மழைக்காலத்தில் தான் கொசுக்களின் இனப்பெருக்க காலமாக இருந்தாலும், கோடைக்காலத்திலும் கொசுக்கள் அதிகமாக கடிப்பதை பலரும் காணலாம்.

உங்கள் வீட்டிலும் கொசுத் தொல்லை அதிகமாக உள்ளதா? இந்த கொசு பிரச்சனையில் இருந்து விடுபட கடைகளில் விற்கப்படும் ஏராளமான கொசு விரட்டி பொருட்களை வாங்கி வீட்டில் வைத்தால், கொசுக்கள் மடியவோ அல்லது கட்டுப்படுவது போன்றோ தெரியவில்லை.

மாறாக அதைப் பயன்படுத்தும் நமக்கு தான் மூச்சுத் திணறல், மூக்கடைப்பு போன்ற சுவாச பிரச்சனைகள் ஏற்படுகின்றன.உங்களுக்கு சுவாச பிரச்சனைகள் இருந்து, கொசு விரட்டிகளை பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தால், இயற்கை வழிகளை மேற்கொள்ளலாம்.

ஏனெனில் சில இயற்கை வழிகளானது கொசுக்களை வீட்டினுள் வரவிடாமல் தடுக்கும் ஆற்றலைக் கொண்டது. இப்போது கொசுக்களை விரட்டவும், கட்டுப்படுத்தவும் உதவும் சில இயற்கை வழிகளைக் காண்போம்.