Article

தூள் பறக்கும் புரமோஷன்.. அப்போ டைட்டில் வின்னர் இரண்டா? ரசிகர்களை குழப்பி வரும் ஜிபி முத்து..!

பிக்பாஸ் 7 புரமோஷன் வேலையில் கடந்த சீசன் போட்டியாளர்கள் இறங்கி வேலை பார்த்து கொண்டிருக்கின்றார்கள்.

பிக்பாஸ்

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 2017 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது.

இது தமிழ் மட்டுமல்ல தெலுங்கு, இந்தி என பன் மொழிகளில் துவங்கப்பட்டது.

பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கிய காலப்பகுதியில் பல சர்ச்சைகள் எழுந்தன.

இவை அணைத்தையும் கமல்ஹாசன் அவர்கள் பேசி ஒரு வழியாக சமாளித்து தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இது தான் முதல் இடத்தில் இருக்கின்றது.

இதனை தொடர்ந்து 6 சீசன்கள் வெற்றிகரமாக முடிவடைந்துள்ள நிலையில், ஏழாவது சீசன் விரைவில் துவங்கும் என கூறப்பட்டது.

ஜிபி முத்துவின் புரமோஷன்

இந்த நிலையில் அக்டோபர் முதலாம் திகதி பிக்பாஸ் 7 ஆரம்பமாக இருக்கும் நிலையில் புரமோஷன் வேலைகள் தீவிரமாக நடந்து கொண்டிருக்கின்றது.

கடந்த சீசன்கள் போட்டியாளர்களாக வந்த பிரபலங்கள் இந்த வேலைகளை சரிவர பார்த்து வருகின்றார்கள்.

அந்த வகையில் ரசிகர்களை குழப்பும் வகையில் ஜிபி முத்து ஒரு ப்ரோமோவில் சில விடயங்கள் கூறியுள்ளார்.

அத்தடன் இந்த முறை இரண்டு வீடு என்பதால் டைட்டில் வின்னரும் இரண்டாக இருப்பார்களா,?” என ரசிகர்கள் குழம்பி வருகிறார்கள்.