Article

மேக்கப் போட பணம் இல்லாததால் திருட்டில் ஈடுபட்ட இளம்பெண்..!

தமிழக மாவட்டமான செங்கல்பட்டில் மேக்கப் போடுவதற்கு பணம் இல்லாததால், திருட்டில் ஈடுபட்ட இளம்பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நகை திருட்டு

செங்கல்பட்டு மாவட்டம், சிங்கப்பெருமாள் கோவில் அருகே உள்ள பகவத்சிங் நகரைச் சேர்ந்த தம்பதியினர் விஜயகுமார் மற்றும் சசிகலா (37). இவர்களது வீட்டில் தே

பின்னர், சசிகலா மறைமலைநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் படி, பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

மேக்கப் போட காசு இல்லை

இந்த சம்பவம் நடைபெற்றதையடுத்து மறைமலைநகர் அருகே உள்ள கீழக்கரணை பகுதியில் பத்மப்பிரியா வாடகை வீட்டில் வசித்து வந்தது சசிகலாவுக்கு தெரியவந்தது. இது குறித்து சசிகலா காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தார்.

இதனைத்தொடர்ந்து, சசிகலா தங்கியிருந்த இடத்திற்கு பொலிஸார் சென்று, அவரை கைது செய்தனர். அப்போது அவர், 7 சவரன் தங்க நகைகளை திருடியதை ஒப்புக்கொண்டார்.

பின்னர் சசிகலாவிடம் நடத்திய விசாரணையில், ஐ.டி நிறுவனத்தில் வேலை செய்வதால் உடை மற்றும் அழகு சாதன பொருட்கள் வாங்குவதற்கு பணம் இல்லாததால் திருடியது தெரியவந்தது.

மேலும், சசிகலாவிடம் இருந்த நகைகளை பொலிஸார் பறிமுதல் செய்தனர், மேக்கப் போட காசு இல்லாததால் இளம்பெண் திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.    

னி மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதிகளான சுரேஷ் மற்றும் பத்மபிரியா (27) வாடகைக்கு தங்கியிருந்தனர்.

இதில் சுரேஷ் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். பிரபல ஐ.டி நிறுவனத்தில் பத்மபிரியா பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், கடந்த மே மாதம் சசிகலா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் 7 சவரன் தங்க நகைகளை பத்மபிரியா திருடியுள்ளார்.