CINEMA

இளையராஜாவின் மகளும் பின்னணிப் பாடகியுமான பவதாரிணி புற்றுநோயால் மரணமடைந்தார்..!

இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும் பின்னணிப் பாடகியுமான பவதாரிணி புற்றுநோயால் ஜனவரி 25ஆம் தேதி உயிரிழந்தார்.

கல்லீரல் புற்றுநோய்க்கு சிகிச்சை பெறுவதற்காக அவர் இலங்கை சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், அவர் இலங்கையில் மாலை 5 மணியளவில் உயிரிழந்தார். அவரது உடல் நாளை (ஜனவரி 26) சென்னைக்கு கொண்டு வரப்பட்டு அங்கு இறுதிச் சடங்குகள் நடைபெற உள்ளன. அவர் கணவர் பாலாஜி. பவதாரிணிக்கு வயது 47.

இவர் இளையராஜாவின் மகளும், கார்த்திக் ராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா ஆகியோரின் சகோதரியும் ஆவார். ‘பாரதி’ படத்தின் ‘மயில் போல பொண்ணு ஒண்ணு’ என்ற தமிழ் பாடலுக்காக சிறந்த பெண் பின்னணிப் பாடகிக்கான தேசிய திரைப்பட விருதை வென்றார்.