CINEMA

கணவரிடம் அனுபவித்த கொடுமை… ராஜ்கிரன் செய்தது என்ன? உண்மையை உடைத்த பிரியா..!

நடிகர் ராஜ்கிரணின் வளர்ப்பு மகள் பிரியா, நடிகர் முனீஸ் ராஜாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், இவரை பிரிந்ததற்கான காரணத்தை கூறியுள்ளார்.

நடிகர் ராஜ்கிரண் மகள் பிரியா

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகரான ராஜ்கிரண். இவரது வளர்ப்பு மகள் பிரியா சீரியல் நடிகர் முனீஸ் ராஜாவை வீட்டை எதிர்த்து காதல் திருமணம் செய்து கொண்டார். 

முனீஸ் ராஜா சீரியலில் பல நகைச்சுவை கதாபாத்திரத்தில் அசத்தியவர் ஆவார். முள்ளும் மலரும் தொடரில் ஹீரோவாகவும் நடித்திருந்தார்.

ராஜ்கிரண் தனது மகள் பிரியாவின் காதலை ஏற்காமல் இருந்ததால் காதல் திருமணம் செய்த இந்த ஜோடிகள், ராஜ்கிரண் மீது அடுத்தடுத்து குற்றச்சாட்டு வைத்து வந்தனர்.

இந்நிலையில் முனீஸ் ராஜா திருமணமான மாதம் முதல், குடித்துவிட்டு தன்னை தகாத வார்த்தையில் பேசி சித்ரவதை செய்ததாகவும், அவருக்கு தேவையான பணத்தை அவ்வப்போது யாரிடமாவது வாங்கிக் கொடுக்க வேண்டும். இல்லையெனில் என்னிடம் சண்டை போட்டுக்கொண்டே தான் இருப்பார்.

கு.டியால் ஏற்பட்ட சண்டை

அப்பா அம்மாவை பகைத்துக் கொண்டு திருமணம் செய்த நாள் முதல் நான் மகிழ்ச்சியாகவே இல்லை. திருமணமான மாதம் முதல் இருவருக்கும் சண்டை நடந்து கொண்டே தான் இருந்தது. 

இரவில் சண்டையிட்ட அவர் காலையில் காலையில் விடிந்ததும் எதுவுமே அவருக்கு நினைவில் இல்லாமல் பேசுவார்… அவரை குடியிலிருந்து மீட்டுவிடலாம் என்று பொறுமையாக இருந்தேன். தற்போது என்னால் முடியவில்லை.

தனது கணவருக்கு நான் மற்றவர்களிடம் பணம் வாங்கிக்கொடுத்த ஆதாரம் எனது மொபைல் போனில் இருக்கின்றது. இதனை நீதிமன்றத்தில் காட்டுவேன்.

மேலும் முனீஸ் ராஜா தனக்கு நம்பிக்கை துரோகம் செய்துவிட்டார். அவருக்கு ஏற்கனவே இரண்டு திருமணம்் நடைபெற்றதாக கூறப்படும் நிலையில், நான் சட்டப்பூர்வமான மனைவி கிடையாது என்றும் பிரியா கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

மன அழுத்தத்திற்கு ஆளான நான் அதற்காக மருந்து மாத்திரைகளை எடுத்து வருகின்றேன். நான் தூக்கியெறிந்த எனது அப்பா தான் மருத்துவம் பார்க்க பணம் கொடுத்து உதவினார் என்று ராஜ்கிரணைக் குறித்தும் பேசியுள்ளார்.