HEALTH

இ ரத்தம் ரொம்ப கம்மியா இருக்கா? வாரம் ஒரு முறை சாப்பிடுங்க..!! அப்புறம் பாருங்க…!!

உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், உடலில் இரத்த ஓட்டம் சிறப்பாக இருக்க வேண்டும். ஏனெனில் இரத்தத்தின் மூலம் தான் உடலுறுப்புக்களுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைக்கின்றன. அதுவும் இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் தான் இந்த முக்கிய பணியை செய்கிறது.

ஹீமோகுளோபினில் இரும்புச்சத்துக்கள் உள்ளன. இது காற்றில் இருந்து ஆக்ஸிஜனை எடுத்து, உடலுறுப்புகளுக்கு வழங்குகின்றன. இந்த ஹீமோகுளோபின் அளவு குறைந்தால், அது இரத்த சிவப்பணுக்களை இழக்கச் செய்து, இரத்த சோகைக்கு வழிவகுக்கும். மேலும் உடலில் உணவில் இருந்து சத்துக்களை உறிஞ்ச முட

இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு மிகவும் குறைவாக இருந்தால், அது உடல் பலவீனம், உடல் சோர்வு, மூச்சு விடுவதில் சிரமம் போன்ற பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளை உண்டாக்கும். சில ஆய்வுகளின் படி, ஹீமோகுளோபின் குறைபாடு பெண்களிடையே தான் பொதுவாக காணப்படுகின்றன.

இதற்கு பெண்கள் மாதந்தோறும் சந்திக்கும் மாதவிடாய் ஒரு முக்கிய காரணமாகும். இம்மாதிரியான சூழ்நிலையில், மாதவிடாய் காலத்தில் இழந்த இரத்தத்தை மேம்படுத்த உணவுகள் தான் பெரிதும் உதவி புரிகின்றன. உங்கள் உடலில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக உள்ளதா? அப்படியானால் அதன் அளவை சட்டென அதிகரிக்க பின்வரும் உணவுகளை உட்கொள்ளுங்கள்.