கிரிஷ் பிறந்தநாளில் முத்துவிடம் மாட்டிக்கொள்ளும் ரோகினி..!
சிறகடிக்க ஆசை சீரியலில் கிரிஷ் பிறந்தநாளில் முத்துவிடம் ரோகினி மாட்டிக்கொள்ளும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.
நடுத்தர குடும்ப பெண் தனது மாமியார் வீட்டில் படும் கஷ்டத்தையும், ஆனால் வீட்டிற்கு நல்ல மருமகளாகவும் இருப்பதையும் அழகாக எடுத்துக் காட்டியுள்ளது
மேலும் மூன்று மகன்களில் இரண்டு மகன்களை மட்டும் நன்றாக பார்க்கும் தாய் ஒரு மகனை மட்டும் ஒதுக்கி வைக்கின்றார். இதற்கான காரணம் இன்னும் சீக்ரெட்டாக இருக்கின்றது.

இந்நிலையில் ரோகினி கிரிஷ் பிறந்தநாளுக்கு ஆடை எடுப்பதற்கு ஜவுளி கடைக்கு சென்றுள்ள நிலையில் அங்கு விஜயாவிடம் மாட்டிக் கொள்கின்றார்.
பின்பு அவரிடம் வேறு காரணத்தை கூறி சமாளித்து வந்த ரோகினி, கிரிஷ் பிறந்தநாளன்று முத்து மற்றும் மீனாவிடம் மாட்டிக்கொள்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.