ரோஹிணி குழந்தையை தத்தெடுத்து வளர்க்க முடிவெடுத்த முத்து அதிர்சியில் ரோஹிணி..!
எந்நேரமும் ஒரு பரபரப்புடன் சென்று கொண்டிருக்கும் சீரியலில் முத்து- வெற்றி வசந்த் கதாநாயகராகவும், மீனா – கோமதி ப்ரியா கதாநாயகியாகவும் நடித்து வருகிறார்கள்.

அம்மா- பையன்களின் பாசத்தை அடிப்படையாக வைத்து ஓடிக் கொண்டிருக்கும் சிறகடிக்க ஆசை சீரியலில் மற்றுமொரு திருப்பம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் க்ரிஷிற்கு பிறந்த நாள் என்பதால் ரோஹினி க்ரிஷிற்கு புது ஆடை, கேக் எல்லாம் வாங்கிக் கொண்டு ஆசையாக அம்மாவின் வீட்டிற்கு செல்கிறார்.
பிறந்த நாளை கொண்டாடுவதற்காக அக்கபக்கம் உள்ளவர்கள் அணைவரும் ரோஹினியின் வீட்டிற்கு வருகிறார்கள். அந்த சமயம், மீனா – முத்து இருவரும் க்ரிஷிற்கு பரிசு வாங்கிக் கொண்டு வாழ்த்துவதற்காக ரோஹினியின் வீட்டிற்கு வருகிறார்கள்.

அவர்களின் கண்ணில் படாமல் ரோஹினி சமையலறையில் ஒழிந்திருந்து க்ரிஷிற்கு கேட் வெட்டுவதை பார்த்துக் கொண்டிருக்கிறார்.