1.8 கோடியில் வீடு! ஆல்யா மானசாவின் ஒரு நாள் சம்பளம் இவ்வளவா..!
சீரியல்களுக்கும், பொழுது போக்கு நிகழ்ச்சிகளுக்கும் பெயர்பெற்ற பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரபான ராஜா ராணி தொடரின் மூலம் பிரபலமானவர் தான் ஆல்யா மானசா.
ஆல்யா மானசா
ராஜா ராணி தொடரில் அறிமுகமாகி மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற இவர் அதெ தொடரில் தனக்கு ஜோடியாக நடித்த நடிகர் சஞ்சீவ்வை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.
அதனை தொடர்ந்து தங்களது தொழிலில் மட்டுமல்லாமல் சொந்த வாழ்க்கையில் ஜெயித்து வருகின்றார். சின்னத்திரை பிரபலங்களில் இந்த ஜோடி தான் டாப்பில் இருக்கின்றார்கள். இவர்களுக்கு இரண்டு குழந்தைகளும் இருக்கின்றார்கள்.
தற்போது பிறபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இனியா’ தொடரில் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்துக் வருகின்றார். அதே போல, சஞ்சீவ் கயல்’ தொடரில் நடிக்கிறார். அண்மையில் இவர்கள் பிரம்மாண்டமான ஒரு வீட்டை கட்டி குடிபுகுந்தமை தொடர்பாக செய்திகள் இணையத்தில் வைரலாகியது.
இந்த நிலையில் சீரியல் நடிகை ஆல்யா மானசா சமீபத்தில் வழங்கிய பேட்டியொன்றில் அவரது சம்பளம் தொடர்பில் வெளிப்படையாக கூறியுள்ளார்.
குறித்த பேட்டியில், ஒரு சின்ன வீட்டில் நாங்கள் அனைவரும் மிகவும் கஷ்டப்பட்டு வாழ்ந்து வந்தோம் எனவும், அதனால் இப்போது எங்கள் ஆசைப்படி வீடு வாங்கி இருக்கிறோம் எனவும், இந்த வீடு சுமார் 1.8 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ளதாகவும், அதை முழுக்க முழுக்க லோனில் கட்டியுள்ளதாகவும் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
இதன் போது அவரின் சம்பளம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, கடந்த 2022ம் ஆண்டு இனியா தொடரின் மூலம் ஒரு நாள் ஷூட்டிங்கிற்கு சுமார் ரூ. 20,000 முதல் ரூ. 25,000 வரை சம்பளமாக தரப்பட்டது எனவும், தற்பொழுது ஒரு நாள் ஷூட்டிங்கிற்கு சுமார் ரூ. 50,000 முதல் ரூ. 60,000 வரை சம்பளம் வாங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.