ArticleNEWS

டைட்டா பிடி..விட்டுடாத’: ஒழுங்கா வண்டிய ஓட்டு மாமா குரங்குகளின் ஜாலியான பைக் சவாரி,வைரலாகும் வீடியோ..!

இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.

விலங்குகளுக்கும் உணர்வுகள் உண்டு. உறவுகளை எவ்வாறு உருவாக்குவது, எவ்வாறு பேணுவது என்று அவற்றுக்கும் தெரியும். விலங்குகளுக்கு இடையிலான அற்புதமான பிணைப்பைக் கண்டு மக்கள் பல நேரங்களில் திகைத்து நிற்கிறார்கள். இவற்றை எடுத்துக்காட்டும் பல வீடியோக்களும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளன. 

இதுபோன்ற ஒரு அற்புதமான பிணைப்பின் வீடியோ சமீபத்தில் இணையத்தில் வெளிவந்துள்ளது. அதில் சில குரங்குகளுக்கு இடையே ஆழமான அன்பு காணப்படுகிறது. வீடியோவில் இந்த குரங்குகளுடன் அவற்றின் உரிமையாளருக்கு இருக்கும் பிணைப்பும் ஆச்சரியமாக இருக்கிறது. வீடியோவில், அனைத்து குரங்குகளும் தங்கள் எஜமானருக்குப் பின்னால் ஒன்றன்பின் ஒன்றாக ஒட்டி அமர்ந்திருக்கும் விதம் பார்க்க மிக நன்றாக உள்ளது. குரங்குகள் இந்த பைக் பயணத்தை ரசிப்பது வீடியோவை பார்த்தால் தெரிகிறது. 

குரங்குகளின் ஜாலியான பைக் பயண வீடியோவை இங்கே காணலாம்: