Article

இது தெரியாம இனிமே இருந்துடாதீங்க!! கடையில் முட்டை வாங்கறதுக்கு முன்னாடி இந்த வீடியோ பாருங்க!

உலகளவில் பல நூறு ஆண்டுகளாக மனிதர்கள் சாப்பிடும் சத்தான உணவுகளில் ஒன்று முட்டை. நிறையப் பேருக்குப் பிடித்த உணவும்கூட. இதில் உடலுக்குத் தேவையான நிறைய சத்துகள் அடங்கியுள்ளன.காலை உணவுடன் முட்டை சாப்பிடுவது உடல் நலத்திற்கு ஆரோக்கியமானதாக கருதப்படுகிறது. நிறைய பேர் முட்டையை அப்படியே உடைத்து குடிக்கும் பழக்கத்தையும் பின்பற்றுகிறார்கள். அது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.

வேக வைக்காத முட்டையில் 10 சதவீதம் புரதமும், 90 சதவீதம் நீரும் உள்ளது. அதனுடன் பொட்டாசியம், மெக்னீசியம், நியாசின், சோடியம் போன்ற பல ஊட்டச்சத்துக்களும் இருக்கின்றன.

முட்டையின் உள்பகுதியான மஞ்சள் கருவில் இரும்பு, துத்தநாகம், பொஸ்பரஸ் போன்ற விட்ட­மின்கள் உள்ளன. முட்டையில் இருக்கும் விட்டமின்கள் இதயம், இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய்க்கு பயனுள்ளதாக இருக்கும். முட்டையை வேக வைத்து சாப்பிட்டால்தான் பலன் கிடைக்கும்.

முட்டையில் உயர் தர புரதச்சத்து உள்ளது. ஒரு முட்டையில் 7 கிராம் அளவுக்கு உயர் தரமான புரதச்சத்து உள்ளது. மேலும் இரும்புச் சத்து, வைட்டமின்கள் என ஊட்டச்சத்துகளின் பெட்டகமாக முட்டை விளங்குகிறது.

தினமும் ஒரு முட்டை சாப்பிடலாம். அதனால் உடல் நலக் குறைபாடு வராது. உடலுக்குத் தேவையான அத்தனை ஊட்டச்சத்தும் ஓரளவுக்கு கிடைத்துவிடும் என்று அமெரிக்க ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். தினம் ஒரு முட்டை உண்பது குருதி அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும் என ஆராய்ச்சிகள் சொல்கிறது.