Article

ஆபத்து என்னனு தெரிஞ்சுக்கிட்டு தீர்வையும் தெரிஞ்சுக்கோங்க

செம்பனை எனப்படும் ஒருவகை பனைமரத்தில் காய்க்கும் பழங்களில் இருந்து பாமாயில் எனப்படும் எண்ணெய் தயாரிக்கப்படுகிறது. செம்பனை எனப்படுவது தென்னை மற்றும் பனைமரத்தை போன்றதொரு மரம். இதை எண்ணெய்ப் பனை என்கின்றனர். மேலும் இம்மரம் பாமாயில் பனை, செம்பனை எனவும் அழைக்கப்படுகிறது.

இரண்டு வகை பனை இனங்களில் இருந்து பாமாயில் தயாரிக்கபடுகிறது. ஒன்று ஆப்ரிக்கன் பாமாயில், மற்றொன்று அமெரிக்கன் பாமாயில். ஆப்பிரிக்காவின் பாமாயில் என்பது ‘எலியிஸ் குயினென்சிஸ்’ என்கிற மர இனத்தில் இருந்து எடுக்கப்படுகிறது. அமெரிக்கன் பாமாயில் என்பது ‘எலியிஸ் ஒலிபெரா’ என்கிற இனத்தில் இருந்து எடுக்கப்படுகிறது. இவை தவிர ‘மாரிபாபனை’ என்கிற மரத்திலிருந்தும் பாமாயில் எடுக்கப்படுகிறது. இந்த எண்ணெய் சிவந்த நிறத்தில் இருக்கும்.

ஆப்பிரிக்க எண்ணெய்ப் பனை மரமானது 20 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. ஒரே மரத்தில் ஆண், மற்றும் பெண் பூக்கள் தனித்தனி பாளையில் காணப்படும். ஒரு பாளையில் பல நூறு பூக்கள் மலரும். காய்கள் 5 – 6 மாதத்தில் முதிர்ச்சி அடையும். காய்கள் நெருக்கமாக ஒரு கொத்தாகக் காணப்படும்.

ஒரு குலையில் 150 முதல் 200 வரை காய்கள் இருக்கும். இதன் பழங்கள் சிவப்பு நிறம் கொண்டவை. எனவேதான் இதன் நிறத்தை வைத்து இது செம்பனை என்று அழைக்கப்டுகிறது.இதில் 10 சதவீதம் ‘லினோலியிக் அமிலம்’ இருப்பதால் கரோட்டின் மிக்கது. இது ‘வைட்டமின் A’ குறைபாட்டினால் ஏற்படும் நோயைத் தடுக்கிறது.

பாமாயில் சோப்பு, சாக்கலேட்டு, மருந்து, வாசனைப் பொருள், ஐஸ் கிரீம், செயற்கை வெண்ணெய் கொழுப்பு, சமையல் எண்ணெய், இனிப்பு வகைகள் தயாரிக்க பயன்படுகிறது. இதன் புண்ணாக்கு மாட்டுத் தீவனமாகிறது. பாமாயிலில் இருந்து மெத்தில் மற்றும் பயோடீசலும் தயாரிக்கப்படுகிறது.சரி வாருங்க ரேஷன் பாமாயில் பற்றிய தீமைகளும் தீர்வுகளும் உங்களுக்கு கீழே கொடுக்க படுக்கப்பட்டுள்ளது. ஆபத்து என்னனு தெரிஞ்சுக்கிட்டு தீர்வையும் தெரிஞ்சுக்கோங்க