NEWS

மாணவனிடம் காதல் பாடம் சொல்லிக் கொடுத்த டியூசன் ஆசிரியை..!

டியூசன் படிக்கும் மாணவனிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசிரியர் கூறியதால் விரக்தில் மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

அம்பாசரை அருகே வைகை வீதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன். அவரது மகன் (கிருஷ்ண குமார், மறுபெயரிடப்பட்டது) 17, பிளஸ் டூ முடித்து கல்லூரியில் சேர்க்கைக்காக காத்திருக்கிறார்.

இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 30ம் தேதி கிருஷ்ணகுமார் தனது நண்பர்களுடன் சென்னை, மாநிலக் கல்லூரிக்கு கலந்தாய்வுக்கு சென்று விட்டு மாலை வீடு திரும்பினார். அதன் பிறகு கிருஷ்ணகுமார் வீட்டு படுக்கை அறையில் தூக்கிட்டுத் தற்சொலைக்கு முயன்றார்.

இதை பார்த்த அவரது பெற்றோர், அவரை மீட்டு, அம்பத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.பரிசோதனை செய்த டாக்டர், கிருஷ்ணகுமார் வழியிலேயே இறந்து விட்டதாக கூறினார்.

இதனையடுத்து உடலை உறவினர்கள் வீட்டிற்கு எடுத்து சென்றனர். தகவலறிந்து அம்பத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

புகாரின் பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமசாமி தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

அம்பத்தூரில் உள்ள ராமசாமி முதலியா மேல்நிலைப்பள்ளியில், அதே பள்ளியில் தற்காலிக ஆசிரியையாக பணியாற்றி வந்த சர்மிளா என்ற ஆசிரியையின் பயிற்சியில், கிருஷ்ணகுமார் கடந்த மூன்று ஆண்டுகளாக படித்து வந்துள்ளார்.

அப்போது மாணவர் கிருஷ்ணகுமாருக்கும், ஆசிரியை சர்மிளாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, அது காதலாக மாறியதாக கூறப்படுகிறது. இதனிடையே ஆசிரியை சர்மிளாவிற்கு அவரது வீட்டில் திருமண வரன் பார்த்து வந்துள்ளனர். இதன்காரணமாக அவர் மாணவனுடனான நட்பை துண்டித்து வந்துள்ளார். மேலும் அவருக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றுவிட்டதால் ஆசிரியை மாணவனுடனான தொடர்பை முழுவதுமாக துண்டித்து விட்டார்.

இதன் காரணமாக ஆசிரியை சர்மிளாவிடம் பலமுறை பேச முடிந்தது. ஆனால், உறவை தொடர ஆசிரியர் மறுத்ததால், மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்த ஆசிரியையை பிரிந்துவிட்டதாக நினைத்து விரக்தியில் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதைத்தொடர்ந்து செல்போனை சோதனை செய்தபோது இவை அனைத்தும் தெரிய வந்ததாக கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட ஆசிரியர் நேற்று போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கற்பித்த ஆசிரியருடன் ஏற்பட்ட நட்பால் ஒருவர் நிலை தடுமாறி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் உறவினர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது