Article

எந்த ஒரு மெஷின்னும் வேண்டாம் வீட்டில் இருக்கும் குழி கரண்டி போதும் அழகா இந்த மாறி செஞ்சு பாருங்க

பதிவுலகம் பல விசித்திரங்களைக் கண்டிருக்கிறது. அதில் ஒன்றாக ஒரு பிரபல பதிவர் சுடுதண்ணீர் செய்வது எப்படி என்று பதிவிடுகிறார். இன்னொரு “பிரபல” “பிரபல” பதிவரோ அதற்கு எதிர்பதிவு எழுதுகிறார்.

தமிழ் மீது வாசம் கொண்ட இன்னொரு பதிவரோ இதற்கு போட்டியாக அவித்த முட்டை செய்வது எப்படி? என்று பதிவிடுகிறார். இதுபோன்ற பதிவுகளால் தான் நமக்குள்ளே ஒளிந்திருக்கும் நளபாக சமையல் கலைஞன் வெளியே வருகிறான்.

ஆண்களுக்காக இவர்கள் ஆற்றியிருக்கும் இந்த சமூக தொண்டை முன்னுதாரணமாகக் கொண்டு நானும் எனக்கு தெரிந்த சமையல்களில் ஒன்றை இந்த சமூகத்திற்காக சொல்லலாம் என்று முடிவெடுத்து இந்த பதிவை டீ குடித்த சில நிமிடங்களில் எழுதத் துவங்குகிறேன்.