HEALTH

7 நாளில் உங்கள் காலில் ஆணி வலியே இல்லாமல் வெளிய வந்திடும் இதை மட்டும் ட்ரை பண்ணுங்க போதும்.

பொதுவாக மழைக்காலங்களில் அல்லது மலைப்பகுதியில் நடந்து செல்லும் போது கால்களில் கற்கள் மற்றும் முற்களினால் அழுத்தம் ஏற்படுவதை தொடர்ந்து காலில் ஆணி வளர ஆரம்பிக்கிறது.

இவ்வாறு உருவாகும் ஆணி என்பது இறந்த தோலின் சிறிய திட்டுகளை உள்ளடக்கியது தொகுதிளை குறிப்பிடுவார்கள்.இதன்படி, கால்களில் வரும் ஆணி அடி பாதத்தில் எரிச்சல் ஏற்படுத்தும் இதனை ஆரம்பத்தில் பார்க்காவிட்டால் காலை எடுக்க வேண்டிய நிலை கூட ஏற்படலாம்.

இது மட்டுமன்றி இறுக்கமான காலணிகள் மற்றும் பெண்கள் உபயோகிக்கும் ஹை ஹீல்ஸ் போன்றவற்றை பயன்படுத்துவதாலும் கால்களில் ஆணி வளருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சரியாக பொருந்தாத காலணி அணிவது தான் ஆணி தோன்றுவதற்கு மிக முக்கியமான காரணம்.

இறுக்கமான காலணிகள் அல்லது ஹீல்ஸ் அணிந்து அதிக நேரம் நிற்பதாலும் கால் ஆணி ஏற்படலாம். காலில் ஷூ அணியாமல் நடப்பது, உறையின்றி ஷூ போடுவது, அதிக உழைப்பு, பாதத்திற்கு அதிக அழுத்தம் தரும் விளையாட்டுகள் போன்றவையும் காலில் ஆணியை ஏற்படுத்தும்.