HEALTH

இதை ஷாம்பூவில் கலந்து கை, கால்களை கழுவினால் போதும், சில வருடங்களாக உடலில் தேங்கியுள்ள அழுக்குகளை நீக்கி நிமிடங்களில் சிகப்பாக மாற்றிவிடும்.

வாரம் முழுவதும் ஓய்வின்றி வேலை செய்து, உடல் களைப்புடன், முகமும் பொலிவிழந்து இருக்கும். இப்படி பொலிவிழந்து காணப்படும் முகத்தை வார இறுதியில் சரியான பராமரிப்புக்களைக் கொடுத்து பொலிவாக்கலாம். பொதுவாக சருமத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் இறந்த செல்களை முழுமையாக நீக்குவதற்கு ப்ளீச்சிங் தான் சரியான வழி.

அதற்கு அழகு நிலையங்களுக்குச் சென்று ப்ளீச்சிங் செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை. வீட்டிலேயே ப்ளீச்சிங் செய்யலாம். அதுவும் வீட்டின் சமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டே மிகவும் ஈஸியாக முகத்தின் பொலிவை அதிகரிக்கலாம்.

மேலும் ப்ளீச்சிங் செய்வதால் சருமத்தின் நிறமும் சற்று அதிகரித்துக் காணப்படும். கட்டாயம் ஒவ்வொருவருக்கும் வெள்ளையாக ஆசை இருக்கும். எனவே சமையலறைப் பொருட்களைக் கொண்டு ப்ளீச்சிங் செய்து வாருங்கள்.

அதுமட்டுமின்றி, இயற்கைப் பொருட்கள் அனைத்து வகையான சருமத்திற்கும் பொருந்தும். சரி, இப்போது முகத்தின் பொலிவை அதிகரிக்க உதவும் அந்த சமையலறைப் பொருட்கள் என்னவென்று படித்து பின்பற்றி வாருங்கள்.