CINEMA

கொழுந்தியாவை பொண்ணு கேட்க போன முத்து.. அதிர்ச்சியில் உறைந்த மீனா – சிறகடிக்க ஆசை ப்ரோமோ..!

விஜய் டிவியில் டிஆர்பியில் டாப் சீரியல்களில் ஒன்றாக சிறகடிக்க ஆசை என்ற சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது இதில் அண்ணாமலை மற்றும் விஜயாவின் மூன்றாவது பையன் ரவிக்கு பெண் பார்த்து வருகின்றனர்.. முதலில் அண்ணாமலை அவருடைய நண்பர் பரசு உடைய பொண்ணை பார்க்கலாம் என முத்துவை அனுப்பி வைத்தார்.

ஆனால் பரசு உங்க அம்மா விஜயா இருக்குற வீட்டுக்கு என் பொண்ணு அனுப்பி வைக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டார் பிறகு விஜயா என்னோட சின்ன வயசு ஃப்ரண்ட் தனலட்சுமி ரொம்ப வசதியான இடத்துல தான் இருக்கா அவ பொண்ண பார்க்கலாம் என்று, தனலட்சுமி விஜயா வீட்டிற்கு வந்தபோது தனலட்சுமி கணவர் அண்ணாமலையை தப்பா பேச..

முத்துவிற்கு கோபம் வந்து அவரை அடித்ததால் இந்த சம்மந்தமும் தட்டி போய் விட்டது, இந்நிலையில் முத்து ரவி கல்யாணத்துல நான் ஒரு முடிவு எடுத்து இருக்கேன் என்று சொல்லி பூ பழம் எல்லாம் வாங்கிக்கொண்டு மீனாவை காரில் அழைசிக்கிட்டு மீனாவுடைய வீட்டிற்கு போகிறார்.

அங்கு போனதும் மீனா என்னங்க எங்க வீட்டுக்கு அழைச்சிட்டு வந்து இருக்கீங்க என்று கேட்க ஏன் வாசல்ல நின்னு கேள்வி கேட்டுகிட்டு இருக்க உள்ள வா என்று மீனாவை அழைத்துக் கொண்டு அவங்க அம்மாவிடம் அத்த ஒரு தாம்பாள தட்டு குடுங்க என தட்டை வாங்கி..

அதில் பூ பழத்தை எல்லாம் வைத்து ரவிக்கும் சீதாவுக்கு நான் கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு நினைக்கிறேன் அத்தை என்று முத்து சொல்கிறார் இதைக் கேட்டு மீனாவும் அவருடைய அம்மாவும் ஷாக்காகி இருப்பது போல் ப்ரோமோ ஒன்று வெளியாகியிருக்கின்றன