Article

இது தெரியாம பார்லர் போய் காசை கரியாக்கிட்டோமே!!

ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு வகையான முக பாவனைகள் இருப்பது இயற்கை தான். அதேபோல் தான் முகச்சுருக்கம் என்பதும். சிலருக்கு இளம் வயதிலும், சிலருக்கு வயதான பிறகும் முகத்தில் சுருக்கம் தோன்ற ஆரம்பிக்கும். இவற்றில் இளம் வயதில் சுருக்கம் வருவது என்பது ஒருவரது வாழ்வில் நிறைய பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும். தங்களது கனவில் இவை தடையை ஏற்படுத்தி விடுமோ என்ற கவலை கூட அதிகமாக தோன்றிவிடும்.

முகத்தில் சுருக்கம் வந்தால் வயதாகிவிட்டது என்பது மட்டுமே காரணம் கிடையாது என்பதை முதலில் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஒருவர் கோபப்படும் போது, ஆச்சரியப்படும் போது, வலி ஏற்படும் போது கூட நெற்றியில் சுருக்கம் ஏற்படும். இனி அதை கவனித்து பாருங்கள். சுருக்கம் என்பது மூன்று வகைப்படும். முதல் சுருக்கம் என்பது, கண்களின் ஓரங்களில் ஏற்படக்கூடியது.

இரண்டாவது, முகத்தில் தோன்றகூடியது. அடிக்கடி ஒரே மாதிரியான முக பாவனையை செய்வதன் மூலம் இது ஏற்படக்கூடும். பாதிப்படைந்த சருமம், புகைப்பிடிக்கும் பழக்கம் அல்லது சூரியனின் புறஊதாக்கதிர்களின் தாக்கம் போன்வற்றால் கூட முகத்தில் சுருக்கம் தோன்றலாம். கடைசி வகை சுருக்கமானது, கழுத்து பகுதியில் வரக்கூடியது.

வயதாவதினால் ஏற்படக்கூடிய பிரச்சனை இது. பெரும்பாலும் பெண்களுக்கு அதிகமாக ஏற்படக்கூடும். முகம், நெற்றி அல்லது கழுத்து போன்ற பகுதியில் சுருக்கம் ஏற்பட்டு அவதிப்படுபவர்களுக்காக இங்கே சில அறிவுரைகள் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றை தெரிந்து நடப்பதன் மூலம் சுருக்கத்தை விரட்டிடலாம். முதலில், இந்த மூன்று வகை சுருக்கங்களும் ஏற்படுவதற்கான காரணங்களை பற்றி தெரிந்து கொள்வோம்.