Article

ஈழத்து பொண்ணுன்னா சும்மாவா சரிகமபா டைட்டில் வின்னர் ஆனார் கில்மிஷா வைரலாகும் வீடியோ…!

சரிகமப நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இலங்கை சிறுமி கில்மிஷா டைட்டில் வின்னர் பட்டத்தை வென்ற காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

சரிகமப

காணொளி கீழ்

பிரபல தொலைக்காட்சியில் பிரமாண்டமாக ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் ஒன்று தான் சரிகமபா.

இந்த நிகழ்ச்சியில் இலங்கை சிறுமிகளான அசானி மற்றும் கில்மிஷா ஆகிய இருவரும் கலந்து கொண்டார்கள்.

இடையில் வந்து நிகழ்ச்சியில் உள்நுழைந்திருந்தாலும் தன்னுடைய திறமையால் பல பாடல்கள்களை அசானி பாடி இருந்தார்.

டைட்டில் வின்னர்

இந்த நிலையில் சரிகமபா நிகழ்ச்சியில் இறுதி போட்டிக்கு செல்லும் 5 போட்டியாளர்களில் ஒருவராக கில்மிஷா  தெரிவாகினார்.

இதனை தொடர்ந்து இன்றைய தினம் இரண்டு சுற்றிகளில் பங்கேற்று சரிகமப லிட்டில் ஜாம் சீசன் 3 டைட்டில் வின்னராக கில்மிஷா தெரிவு செய்யப்பட்டுள்ளார். அத்துடன் இரண்டாம் இடமாக சஞ்சானாவும் மூன்றாம் இடமாக ரிக்ஷிதாவும் தெரிவுச் செய்யப்பட்டுள்ளனர்.

இதன் போது எடுக்கப்பட்ட காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

மேலும் இது தொடர்பான செய்திகளும் பரவலாக வந்த வண்ணம் உள்ளன. வெற்றி வாகை சூடிய கில்மிஷாவிற்கு இலங்கை ரசிகர்கள் வாழ்த்து தெரிவிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

டைட்டில் வின்னர் ஆனார் கில்மிஷா