Article

மிகவும் அப்பாவியான ராசியினர் இவர்கள் தானாம்: யார் யார்னு தெரியுமா..!

பொதுவாகவே ஒவ்வொரு தனி மனிதனுக்கும் தனித்துவமான ஆளுமைகளும் பண்புகளும் காணப்படும். இதில் அவர்கள் பிறந்த ராசி பெரிதும் தாக்கம் செலுத்துவதாக ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகின்றது.அந்த வகையில் சிலர் வெகுளியாகவும் அப்பாவித்தனமாகவும் இருப்பார்கள்.இவர்கள் எல்லோரும் நல்லவர்கள் என்ற எண்ணத்தை கொண்டிருப்பார்கள்.

யார் எது சொன்னாலும் உடனே நம்பிவிடுவார்கள். இப்படிப்பட் ராசியினர் யார் யார் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

கடகம் 

கடக ராசிக்காரர்கள் தங்களைச் சுற்றியுள்ள அனைவரையும் குழந்தைகளை போல கள்ளங்கபடமற்றவர்கள் என்று நம்புகிறார். மேலும் மற்றவர்கள் மீது உண்மையான அக்கறையும் பாசமும் காட்டுவார்களாம்.

இவர்களின் பாசத்தை மற்றவர்கள் புறக்கணிக்க முடியாத அளவு கடினமாக இருக்கும். தங்கள் அன்புக்குரியவர்களைக் கவனித்துக்கொள்வது அல்லது அவர்களுக்கு ஆதரவாக இருப்பது என எதுவாக இருந்தாலும், கடக ராசிக்காரர்கள் தங்கள் கள்ளங்கபடமில்லாத மனதை வெளிப்படுத்துவார்கள்.

மீனம்

மீன ராசிக்காரர்கள் பொதுவாகவே இரக்க குணத்திற்கு பெயர் போனவர்கள். மற்றவர்களை புரிந்து கொண்டு நடப்பதிலும் வல்லவர்கள். இவர்கள் பெரும்பாலும் அப்பாவியாகவே இருப்பார்கள்.

தங்களின் தெளிவான கற்பனைகள் மற்றும் இரக்க குணத்தின் மூலம் மற்றவர்களை எளிதாக நம்பிவிடுவார்கள். எனவே வஞ்சகம், கள்ளங்கபடமற்ற தூய்மையான அன்பை அவர்கள் கொண்டிருப்பார்கள்.

துலாம்

சமநிலை மற்றும் நல்லிணக்கட்திற்காக அறியப்பட்ட துலாம் ராசிக்காரர்கள் அப்பாவியாக இருப்பார்கள்.

மற்றவர்களிடம் உள்ள நல்ல குணங்களை மட்டுமே காணும் இவர்கள் அனைவரும் நம்பவர்கள் என்று நம்புவார்கள்.