CINEMA

நான் அந்த தவறு செய்யாமல் இருந்திருந்தால் அப்பா இருந்திருப்பார்- எஸ்பிபியின் மகள் பல்லவி எமோஷ்னல்..!

பின்னணி பாடகர் எஸ்.பி.பியின் இழப்பு குறித்து அவரது மகள் பல்லவி பேசியுள்ளார்.

எஸ்.பி.பாலசுப்பிரமணியம்

இந்திய சினிமாவில் பாடகராகவும், நடிகராகவும், ஒரு நல்ல மனிதராகவும் பலரை கவர்ந்தவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். ‘பாடும் நிலா’ என்று அனைவராலும் அன்போடு

இதுவரை சுமார் 40,000 பாடல்களை பாடியுள்ள எஸ்.பி.பி கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இந்நிலையில் எஸ்.பி.பியின் இழப்பு குறித்து அவரது மகள் பல்லவி பிரபல சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார்.

அவர் பேசியதாவது, “கொரோனா காலத்தில் அப்பாவிடம் ஹைதராபாத்துக்கு செல்ல வேண்டாம் என்று நான் சொல்லாமல் இருந்தது தான் என்னுடைய மிகப்பெரிய தவறாக நினைக்கிறேன்.

ழைக்கப்படும் இவரின் குரலுக்கு மயங்காதவர்களே இருக்க முடியாது.

இதுவரை சுமார் 40,000 பாடல்களை பாடியுள்ள எஸ்.பி.பி கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இந்நிலையில் எஸ்.பி.பியின் இழப்பு குறித்து அவரது மகள் பல்லவி பிரபல சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார்.

அவர் பேசியதாவது, “கொரோனா காலத்தில் அப்பாவிடம் ஹைதராபாத்துக்கு செல்ல வேண்டாம் என்று நான் சொல்லாமல் இருந்தது தான் என்னுடைய மிகப்பெரிய தவறாக நினைக்கிறேன்.

மகள் வேதனை

என்னுடைய அம்மாவும் அவ்வளவு தடுத்து பார்த்தார். ஆனால் அப்பா கேட்கவே இல்லை. நான் இந்த அளவிற்கு ஃபீல் பண்ணுவதற்கு காரணம் அப்பாவுக்கு ஹைதராபாத்தில் வைத்துதான் கொரோனா பரவியது.

ஒருவேளை நான் நீங்கள் அங்கு போக வேண்டாம் என்று சொல்லி இருந்தால் அவர் சென்றிருக்க மாட்டாரோ என்று எண்ணம் எனக்கு எப்போதும் சுற்றிக்கொண்டே இருக்கிறது.

அப்பாவை பற்றி நினைக்கும் போது எல்லாம் அப்பா மருத்துவமனையில் இருந்த தருணங்கள் தான் என்னுடைய கண் முன்னே வந்து கொண்டிருக்கிறது. அப்பாவுக்கு அப்படி நடந்திருக்கவே வேண்டாம் அவர் அந்த அளவு கஷ்டப்பட்டு இறக்கும் அளவிற்கு யாருக்கு என்ன செய்தார் என்பது எனக்கு தெரியவில்லை” என்று பல்லவி கண்ணீர் மல்க பேசியுள்ளார்.