HEALTH

பல வருட கால்வலியும் 5 நிமிடத்தில் பறந்து போக பாட்டிவைத்தியம்

நாள் முழுவதும் ஒட்டுமொத்த உடல் பாரத்தையும் தாங்கி நிற்கும் கால்களுக்கு ஓய்வு என்பது உட்காரும் போதும், உறங்கும் போதும் மட்டும் தான் கிடைக்கும். அதிலும் ஒருவர் தனது உயரத்திற்கு ஏற்ற உடல் எடையுடன் இருந்தால், பிரச்சனை இல்லை. ஆனால் உடல் பருமன் அளவுக்கு அதிகமாகும் போது தான் பிரச்சனையே ஆரம்பமாகிறது.

அதுவும் உடல் பருமனுடன் இருப்பவர்கள் நீண்ட நேரம் நின்று கொண்டிருந்தால், உடலைத் தாக்கும் கால்களின் நிலைமை மிகவும் மோசமாகும்.அதில் ஆரம்பத்தில் கால்கள் வலிக்க ஆரம்பித்து, பின் நாளாக ஆக தாங்க முடியாத வலியை உண்டாக்கும். கால்கள் வலிப்பதற்கு உடல் பருமன் மட்டும் காரணமல்ல,

வேறுசில காரணங்களும் உள்ளன. சில வகையான கால் வலிகள் எரிச்சலூட்டி, மிகுந்த அசௌகரியத்தை உண்டாக்கும். இன்னும் சில வகை கால் வலிகள் மிகுந்த வலியை உண்டாக்கும்.

இந்த கால் வலிகளுக்கு தீர்வே கிடையாதா என்று பலர் புலம்புவார்கள். ஒரு நல்ல செய்தி என்னவென்றால், கால் வலிகளுக்கு இயற்கையாகவே எளிதில் தீர்வு காணலாம். இக்கட்டுரையில் கால் வலிக்கான சில எளிய இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் பின்பற்றினால் நிச்சயம் கால் வலியில் இருந்து விடுபடலாம்.