Article

பல்லி கரப்பான் பூச்சிய ஒழிக்க இந்த ஒரு பொருள் இருந்தா போதும்

கண்டிப்பாக ஒவ்வொருவரும் தங்களின் வீட்டிலும் பல்லி, கரப்பான் பூச்சி, கொசு, எலி போன்றவைகளால் அதிக தொந்தரவுகளை சந்தித்திருப்போம். இவைகளை எப்போது தான் வீட்டில் இருந்து ஒழிப்போம் என்று பலரும் நினைப்பதோடு, கடைகளில் விற்கும் கண்ட பொருட்களையும் வாங்கிப் பயன்படுத்துவோம். இருப்பினும் எந்த ஒரு பயனும் கிடைத்திருக்காது.

அப்படி பணம் செலவழித்து கண்ட பொருட்களைப் பயன்படுத்தி அவைகளை விரட்டுவதற்கு பதிலாக, ஒருசில இயற்கை பொருட்களைக் கொண்டே அவற்றை எளிதில் விரட்டலாம். இங்கு பலரையும் பயமுறுத்தும் எலி, பல்லி, கரப்பான் பூச்சி மற்றும் பல தொல்லைகளை விரட்டுவதற்கான எளிய வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.தண்ணீர் அதிகம் புழங்கும் இடத்தில் எப்போதும், கரப்பான் பூச்சி பல்லி, தவளை போன்றவை இருக்கும்.

குறிப்பாக நம்முடைய வீடுகளில் கிச்சன், பாத்ரூம் போன்ற இடங்களில் அதிக அளவில் கரப்பான் பூச்சி பல்லி போன்றவை அதிக அளவில் உலா வந்துநமக்கு தொல்லை கொடுக்கும். இவற்றை முற்றிலும் ஒழிப்பது, மிகவும் கடினமான ஒன்றாகும்.

நாம் இவற்றை மிகவும் சுலபமான முறையில் கட்டுப்படுத்த துவங்கிவிட்டால், இவற்றின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து விடும். இறுதியில், முற்றிலும் அழிந்து போய் விடும்.