Article

18 வயது தாண்டியவர்கள் மட்டும் இதைப் படிங்க ப்ளீஸ்.. அவர்களுக்கு மட்டுமே புரியும் பதிவு இது..!

சிலநேரம் வாழ்வின் யதார்த்தத்தை புரிந்துகொள்ள நாம் கொஞ்சம் பக்குவப்பட்டிருக்கத்தான் வேண்டும். அப்படிப்பட்ட ஒரு பதிவு தான் இது. 18 பிளஸ் ரீடர்ஸ்களுக்கானது.

அன்றைய தினம் அதிகாலையிலேயே எழுந்து அவசரகதியில் ஆபீஸிற்கு கிளம்பிநின்றேன். அப்போது வாசலில் வந்த செய்தித்தாலை எடுத்துப் பார்த்தேன். அதில் ஒரு கண்ணீர் அஞ்சலி விளம்பரம். அதிலும் என்படம். ஆனால் எனக்கு என்ன ஆனது? நான் நன்றாகத்தானே இருக்கிறேன் என நினைத்தேன். நேற்று படுக்கையில் இருக்கும்போது எனது இடதுமார்பு வலித்தது.நல்ல தூக்கம் போலிருக்கிறது. ஆமாம்..என்னோடு பக்கத்தில் படுத்திருந்த என் மனைவி எங்கே?

அவள் எனக்கு காபியும் தரவில்லையே…ஆஹா, அங்கே ஒரு சடலம் இருக்கிறதே. அது யார்? நானே தான். அப்படியானால் நான் இறந்துவிட்டேனா? என்னுடைய தெருவாசிகள் வீட்டுக்குள் வந்து என் உடலைப் பார்த்து செல்கிறார்கள். வீட்டில் கூட்டமாக இருந்து ஒப்பாரி வைக்கிறார்கள்.என் மனைவி, குழந்தைகளுக்கு ஒவ்வொருவராய் ஆறுதல் சொன்னவண்ணம் இருந்தார்கள். நான் இறக்கவில்லை. இங்கேதான் இருக்கிறேன் என கத்தியும் யார் காதிலும் விழவில்லை. இறப்பு இப்படித்தான் இருக்குமா? என என்னுக்குள்ளே கேட்டுக்கொண்டேன். என் சப்தமும், அழுகையும் யாருக்கும் கேட்கவில்லை.

எனக்கு தலைவலி என்றால்கூட அழுதுவிடும் என் மனைவி என் இழப்பை தாங்கமுடியாமல் தலையில் அடித்து அழுதுகொண்டிருந்தாள். என் குழந்தை ஒருபுறம், என் பெற்றோர் ஒருபுறமும் அழுதுகொண்டு இருந்தார்கள்.ஒரு மூலையில் நின்று ஒருவன் அழுதுகொண்டு இருந்தான். என் பழைய நண்பன். ஒரு சின்ன பிரச்னையில் இருவரும் பிரிந்துவிட்டோம். நாங்கள் பேசியும் ஓராண்டு ஆகிறது. ஆனாலும் அவன் வந்திருக்கிறான். அவனிடம் மன்னிப்பு கேட்கவேண்டும் போல் தோன்றியது.அவனை அழைத்தேன். அவனுக்கும் என்குரல் கேட்கவில்லை.

அருகில் இருந்த சாமிப்படத்தினைப் பார்த்து, எனக்கு இன்னும் கொஞ்சகாலம் கொடுங்கள். எல்லாரிடமும் நான் வைத்திருக்கும் அன்பை காட்டவேண்டுமென நினைத்து பிரார்த்தித்தேன்.நண்பனிடம் மன்னிப்பு கேட்க, என் குழந்தையை கட்டியணைக்க, அம்மாவிடம் அன்புகாட்ட, மனைவியிடம் பாசம்காட்ட இன்னொரு வாய்ப்பு என இறைவனிடம் கெஞ்சினேன். அப்போது யாரோ என்னை உலுக்க, அதிர்ந்தேன்..அடடே என் மனைவி

தூக்கத்தில் என்ன உளறல்? ஏதாவது கனவு கண்டீர்களா? எனக் கேட்டாள். என் மனைவி பேசுவது எனக்குக் கேட்டது. உடனே நானும், இந்த உலகத்திலேயே அழகான, அன்பான மனைவி நீ தான். எனச் சொன்னேன். அவளுக்கோ ஏன் என்றே புரியாமல் ஆனந்தக் கண்ணீர் வந்தது. ஆம்..18 பிளஸ் நண்பர்களே உங்களுக்குள் இருக்கும் ஈகோவை புறந்தள்ளிவிட்டு புதிய உலகுக்கு பயணப்படுங்கள். இதுவே கனவின்றி நிஜமாகி இருந்தால் அந்த இரண்டாவது வாய்ப்பே வாய்த்திருக்காது அல்லவா? அப்புறம் நான் அந்த சண்டையிட்ட நண்பனிடமும் பேசிவிட்டேன். இந்த பதிவு வாழ்வில் யதார்த்தத்தை உணர்த்துகிறது தானே