Article

உங்களுக்கு P எழுத்தில் பெயர் தொடங்கும் நண்பர்கள் உள்ளார்களா? அவங்க உண்மையில் எப்படிப்பட்டவங்க தெரியுமா..!

உங்கள் பெயர் உங்களை பல வழிகளில் வரையறுக்கிறது. அது உங்கள் குணாதிசயம், விமர்சனத்தை ஏற்றுக்கொள்ளும் திறன் அல்லது குறைபாடு, உள்ளுணர்வு, உறுதிப்பாடு, உங்கள் காதல் குணம் என பல அம்சங்களைப் பற்றி விவரிக்கக்கூடும். உங்கள் பெயரின் முதல் எழுத்தும் உங்களின் ஆளுமைப் பற்றிய பல ரகசியங்களை வெளிப்படுத்தக்கூடும்.

உங்கள் பெயர் P என்ற எழுத்தில் உங்களுக்குள் பல ரகசியங்களும், திறமைகளும் நிறைந்திருக்கும். அதனை உணர்ந்து அதை நீங்கள் சரியாக பயன்படுத்தினால் வெற்றிக்கதவை விரைவில் திறக்கலாம். P எழுத்தில் பெயர் தொடங்குபவர்களின் உண்மையான குணங்கள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

எண் 8

எண் கணிதத்தின்படி, P என்ற எழுத்து சனிபகவானால் நிர்வகிக்கப்படும் எண் 8 ஐக் குறிக்கிறது. இது உத்தரா பால்குனி நட்சத்திரத்தின் கீழ் வருகிறது, அதன் அதிபதி சூரியன், மற்றும் அதன் ராசி அடையாளமாக கன்னி ராசியும், ஆளும் கிரகமாக புதனும் உள்ளது.

கிரக நிலைகள்

எழுத்து P என்பது புதன், சூரியன் மற்றும் சனி ஆகிய 3 கிரகங்களின் வலுவான கலவையாக மாறுகிறது. ஜோதிடத்தில் இந்த 3 கிரகங்களும் பகிர்ந்து கொள்ளும் வலுவான உறவு உள்ளது. சூரியன் புதன் மற்றும் சனி ஆகிய இரு கிரகங்களுக்கும் தந்தையாகக் கருதப்படுகிறார். புதன் சூரியனுடன் வலுவான தொடர்பைக் கொண்டிருந்தாலும், சனி சூரியனிடம் பகைமையை உணர்கிறது. இவர்களுக்கான ஒரே சிறந்த அறிவுரை ஒழுக்கமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதாகும். ஒழுக்கம் மற்றும் கடின உழைப்பு உள்ளவர்கள் வாழ்க்கையில் நிறைய சாதிக்க முடியும். சூரியன் மற்றும் சனி, இருவரும் ஒழுக்கத்தை எதிர்பார்க்கிறார்கள் மற்றும் வெகுமதி அளிக்கிறார்கள். இந்த 2 கிரகங்களால் நேரத்திற்கான அர்ப்பணிப்பு மிகவும் மதிக்கப்படுகிறது.

மறுபுறம் புதன் ஒரு அலைந்து திரிபவர், அனுபவங்களைத் தேடுபவர், பயணம் செய்கிறார், தொடர்பு கொள்கிறார் மற்றும் சுதந்திரமான வாழ்க்கையை அனுபவிக்கிறார், அதே நேரத்தில் தனித்துவமான மற்றும் வித்தியாசமான ஒன்றை உருவாக்க விரும்புகிறார். இந்த ஆற்றல்கள் ஒரே எழுத்தில் ஒன்றிணைந்தால், அது அறிவார்ந்த மற்றும் கவர்ச்சியான ஒரு ஆளுமையை வெளிப்படுத்துகிறது. P எழுத்தில் பெயர் தொடங்குபவர்கள் இந்த கவர்ச்சியான ஆளுமையைக் கொண்டிருப்பார்கள்.

காதல் வாழ்க்கை

அவர்களின் வசீகரமான தோற்றம் பெரும்பாலும் அவர்களை காதலில் ஈர்க்கிறது, ஆனால் எந்தவொரு உறவிலும் பரிபூரணமாக இருக்க வேண்டும் என்ற அவர்களின் எண்ணம் மற்றும் அவர்களின் வழியில் விஷயங்களைச் செய்ய வேண்டிய அவசியம் பெரும்பாலும் அவர்கள் எதிர்பார்ப்பதை விட விரைவில் பிரிவை நோக்கி அழைத்துச் செல்கிறது. அவர்கள் அடிக்கடி கோபத்தை வீசுகிறார்கள், அதனால் அவர்களின் காதல் வாழ்க்கை பதட்டம் நிறைந்ததாக இருக்கும். இவர்களில் பெரும்பாலானவர்கள் அவர்கள் தங்கள் குடும்பத்திலிருந்து முழுமையான அன்பை பெறுகிறார்கள். இது மற்றவர்களின் குறைகளை நோக்கி அவர்களை பொறுமையிழக்கச் செய்கிறது.

புத்திசாலித்தனம்

அவர்களின் புத்திசாலித்தனம், பரிசோதனை திறன் மற்றும் இயற்கையான தலைமைத்துவ திறன் ஆகியவற்றின் காரணமாக, அவர்கள் வெற்றிகரமான தொழில்முனைவோராக மாறுகிறார்கள் மற்றும் பெரும்பாலும் தொழில் வாழ்க்கையில் ஒரு தனித்துவமான அடையாளத்தை உருவாக்குகிறார்கள். சில சமயங்களில், அவர்களின் யோசனைகள் மிகவும் சிறப்பானதாக வெற்றி அடையலாம், அதனால் அவர்கள் ஒரு சில உயர்வையும் தாழ்வையும் காணலாம் ஆனால் அவர்களின் உற்சாகம் அவர்களை விட்டுவிடாது.

நகைச்சுவை குணம்

நகைச்சுவை வாழ்க்கையின் ஒரு பகுதியாகும், ஏனெனில் அது சாதாரண விஷயங்களைக் கூட வேடிக்கையாக மாற்றுகிறது. P எழுத்தில் பெயர் தொடங்கும் நண்பர்கள் உங்களுக்கு இருந்தால் அவர்கள் அனைத்து சூழ்நிலையையும் கலகலப்பாக மாற்றுவதை நீங்கள் கவனித்திருக்கலாம். அவர்களிடம் வித்தியாசமான நகைச்சுவை உள்ளது, அதனை புரிந்து கொள்பவர்கள் அவர்களுடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவிடலாம்.